• Jul 24 2025

ட்ராப் -ஆன லோகேஷ் கனகராஜ் - அனிருத் கூட்டணி...காரணம் என்ன? பெரும் ஏமாற்றத்தில் ரசிகர்கள்..!

Jo / 2 years ago

Advertisement

Listen News!

ஸ்ண்ட் மாஸ்டர்ஸ் அன்பறிவு இயக்கத்தில் லோகேஷும் அனிருத்தும் ஒரு படத்தில் ஹீரோவாக நடிக்கவுள்ளதாக சொல்லப்பட்டது.சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாக இருந்த இந்தப் படம் ட்ராப் ஆனதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனிடையே ஸ்டண்ட் மாஸ்டர்ஸ் அன்பறிவு இயக்கும் ஒரு படத்தில் லோகேஷ் கனகராஜும் அனிருத்தும் ஹீரோவாக நடிப்பதாக சொல்லப்பட்டது. மேலும், இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கவிருப்பதாகவும் தகவல்கள் தெரிவித்தன. கேஜிஎஃப், விக்ரம் உட்பட பல பிரம்மாண்டமான படங்களுக்கு ஸ்டண்ட் கோரியோகிராபி செய்து பிரபலமானவர்கள் அன்பறிவு சகோதரர்கள்.டாப் ஹீர்க்களின் படங்களுக்கு ஸ்டண்ட் கோரியோகிராபி செய்துவரும் அன்பறிவு சகோதரர்கள், முதன்முறையாக இயக்குநர் கனவோடு களமிறங்கினர். 

ஆனால், தற்போது லோகேஷ், அனிருத் இருவருமே படு பிஸியாக உள்ளனர். லியோ ஷூட்டிங் முடிந்ததும் கைதி 2, தலைவர் 171 என லோகேஷின் லைன் அப்பில் 2 படங்கள் உள்ளன. அனிருத் இன்னும் பிஸியாக காணப்படுகிறார். அதனால், லோகேஷ் - அனிருத் இணைந்து நடிக்கவிருந்த படத்தை ட்ராப் செய்துவிடலாம் என சன் பிக்சர்ஸ் முடிவெடுத்துள்ளதாம். ஆனாலும், இதுகுறித்து படக்குழு தரப்பில் இருந்து அப்டேட் எதுவும் வெளியாகவில்லை.

மாஸ்டர், விக்ரம் படங்களில் ஒன்றாக பணிபுரிந்த லோகேஷ், அனிருத் கூட்டணி, தற்போது லியோவிலும் இணைந்துள்ளது. லோகேஷின் ஸ்டைலிஷான மேக்கிங்கிற்கு, தரமாக பிஜிஎம் போட்டு அதகளம் செய்துவருகிறார் அனிருத். அதனால் இவர்கள் இருவரும் இணைந்து நடிக்கும் படத்தை ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர். ஆனால், அது தொடங்கும் முன்னரே ட்ராப் ஆகவுள்ளது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்துள்ளது என்றே சொல்ல வேண்டும்

Advertisement

Advertisement