• Jul 25 2025

புதிய சொகுசு கார் வாங்கிய லோகேஷ் கனகராஜ் - அடேங்கப்பா...விலை இத்தனை கோடியா?

Jo / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் குறுகிய காலத்தில் அசுர வளர்ச்சி கண்டவர் இயக்குநர் லோகேஷ் கனகராஜ். மாநகரம் படத்தில் தொடங்கிய அவரது பயணம், கைதி, மாஸ்டர், விக்ரம் என அடுத்தடுத்து மாஸ் ஹிட் படங்களை கொடுத்து நூறு சதவீத வெற்றியுடன் பயணித்துக் கொண்டிருக்கிறார். அவர் இயக்கத்தில் விஜய் நடிப்பில் தற்போது லியோ திரைப்படம் உருவாகி உள்ளது. இப்படம் வருகிற அக்டோபர் மாதம் 19-ந் தேதி திரைக்கு வர உள்ளது.

இதற்கு முன்னதாக அவர் லெக்சஸ் கார் வைத்திருந்தார். அந்த காரை நடிகர் கமல்ஹாசன் தான் பரிசாக வழங்கி இருந்தார். 

அடுத்து தன் அன்பு பரிசாக லெக்சஸ் காரை லோகேஷுக்கு சர்ப்ரைஸாக வழங்கினார் கமல். அந்த லெக்சஸ் காரின் மதிப்பு ரூ.80 லட்சம் ஆகும். தற்போது அதற்கு டபுள் மடங்கு பட்ஜெட்டில் பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் காரை வாங்கி இருக்கிறார் லோகேஷ்.

புது கார் வாங்கியபோது லோகேஷ் கனகராஜ் எடுத்துக் கொண்ட புகைப்படம் வைரலாகி வருகிறது. இந்த காரின் மதிப்பு 1.70 கோடியாம்.  புது கார் வாங்கிய லோகேஷ் கனகராஜுக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.


Advertisement

Advertisement