• Jul 24 2025

தேரை இழுத்து தெருவில் விட்ட லோகேஷ் கனகராஜ்! புலம்பி வரும் தளபதி ரசிகர்கள்!

sarmiya / 1 year ago

Advertisement

Listen News!

லோகேஷ் இயக்கத்தல் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த லியோ திரைப்படம் நேற்று வெளியாகி இருந்தது. எப்படியும்  இந்த கதாபாத்திரத்திற்குள் முந்தைய கதாபாத்திரங்கள் வந்துவிடும் அவர்கள் ஆசையாக காத்திருந்தனர். ஆனால் அதில் பாதியைக் கூட லோகேஷ் நிறைவேற்றவில்லை. ஏதோ எல் சி யு கனெக்ட் செய்ய வேண்டுமே என கடமைக்கு காட்சிகளை வைத்தது போல இருக்கின்றது என ஆடியன்ஸ் வேதனையுடன் பகிர்ந்து வருகின்றனர்.


லோகேஷ் இப்படி பல விஷயங்களில் கோட் டை விட்டிருப்பது அதிர்ச்சியளிக்கின்றது. இதற்கு பேசாமல் விஜய் அட்லி கூடவே கூட்டணி அமைத்திருக்கலாம் என்ற கருத்தும்  தற்போது பரவி வருகின்றது. ஏனெனில் வாரிசு படத்திற்கு பின் இவர்களின் கூட்டணிதான் இணையும் என  பேசப்பட்டது.ஆனால் விக்ரமின் தாறுமாறு வெற்றி ஏற்கனவே மாஸ்டர் கொடுத்த ஹிட் , விஜய் லோகேஷ் மீது நம்பிக்கை வைத்தே இறங்கியுள்ளார். அதற்கேற்ப சில காட்சிகளில் ரிஸ்க் எடுத்தும் நடித்துள்ளார். அப்படி இருந்தும் தற்போது கலவையான விமர்சனங்களே வந்து கொண்டிருக்கின்றது.


அந்த வகையில் ஆசைத்தம்பி அட்லியாவது விஜயை காப்பாற்றி இருப்பார் ஆனால் லோகேஷ் இப்படி தேரை இழுத்து தெருவில் விட்டுட்டாரே என விஜய் ரசிகர்கள் புலம்பி வருகின்றனர்.   

Advertisement

Advertisement