• Jul 25 2025

“சாரி மச்சி பார்கவ் செத்துட்டான்”-நடிகர் சாந்தனுக்கு வாய்ப்புக் கொடுக்க மறுக்கும் லோகேஷ் கனகராஜ்

stella / 3 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் மாஸ் இயக்குநராக வலம் வருபவர் லோகேஷ் கனகராஜ். இவரது இயக்கத்தில் கடந்த ஜுன் மாதம் 3 ம் திகதி வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றி பெற்று வரும் திரைப்படம் தான் விக்ரம். இப்படத்தில் கதாநாயகனாக கமல்ஹாசன் நடித்திருந்தார்.

இப்படத்திற்கு அனிரூத் இசையமைத்திருந்ததோடு விஜய் சேதுபதி, பகத் பாசில் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்திலும் சூர்யா சிறப்புத் தோற்றத்திலும் நடித்திருந்தார்.

இந்த படத்தில் லோகேஷின் முந்தைய படமான கைதியின் காட்சிகளும் இடம்பெற்றிருந்தன. இந்த படம் பெரும் வெற்றி பெற்றுள்ள நிலையில் நேற்று லோகேஷ் கனகராஜ் ட்விட்டரில் #AskDirLokesh என்ற ஹேஷ்டேகில் ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளித்தார், அதில் சில பிரபலங்களுமே அவரிடம் கேள்வி எழுப்பினார்கள்.

அதில் நடிகர் சாந்தனு “மாஸ்டர் படத்தில் இறந்த பார்கவ் உங்களுடைய மல்டிவெர்ஸில் மீண்டும் வருவாரா?” என கேள்வி எழுப்பினார். அதற்கு லோகேஷ் “சாரி மச்சி.. பார்கவ் செத்துட்டான்” என்று பதிலளித்துள்ளார். லோகேஷ் இயக்கிய மாஸ்டர் படத்தில் பார்கவ் கேரக்டரில் சாந்தனுதான் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement