• Jul 24 2025

காப்பியடித்து கதாபாத்திரத்தை உருவாக்கிய லோகேஷ் கனகராஜ்...கலக்கத்தில் ரசிகர்கள்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

மாநகரம் படத்தின் மூலம் அறிமுகமாகி கைதி படத்தின் மூலம்  தனக்கென ஒரு சார்ராஜ்ஜியத்தை உருவாக்கிaவர் லோகேஷ் கனகராஜ்.

இதன்பின் விஜய்யுடன் கைகோர்த்த இவர் மாஸ்டர் எனும் படத்தை இயக்கி, விஜய்யின் கேரியரில் இதுவரை பார்த்திராத முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் விஜய்யை நடிக்க வைத்திருந்தார்.

அத்தோடு முழு நேர குடிகாரனாக நடித்திருந்த விஜய் ரசிகர்களின் கண்களுக்கு புதிதாக தெரிந்தார். அவருடைய கதாபாத்திர பழக்கவழக்கம் கூட முற்றிலும் புதிதாக இருந்தது.

இவ்வாறுஇருக்கையில் , மாஸ்டர் படத்தில் விஜய் நடித்த இந்த கதாபாத்திரத்தில் ஹாலிவுட் படத்தில் இருந்து தான் லோகேஷ் காப்பியடித்துள்ளார் என கூறப்படுகிறது.

ஹாலிவுட்டில் ஜானி டெப் நடித்து 2018ஆம் ஆண்டு வெளிவந்த the professor படத்தில் இடம்பெறும் ஜானி டெப்பின் கதாபாத்திரம் கூட கல்லூரியில் வேலை பார்க்கும் professor முழு நேர குடிகாரனாக தான் இருப்பார்.



மேலும் இதை கவனித்த நெட்டிசன்கள் சிலர் the professor படத்தில் வரும் ஜானி டெப்பின் கதாபாத்திரத்தை காப்பியடித்து தான் மாஸ்டர் படத்தில் விஜய் கதாபாத்திரத்தை லோகேஷ் உருவாக்கியுள்ளார் என சொல்கின்றனர்.

இதனால் அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் லியோ படத்திலும் இப்படி ஆகிவிடுமோ என்றும் தற்போதே பேச்சு எழுந்துவிட்டது.


Advertisement

Advertisement