• Jul 23 2025

15 கோடியுடன் வெளிநாட்டுக்குப் பறக்கவுள்ள லோகேஷ் கனகராஜ்- லியோ படப்பிடிப்பு முடிய முதல் இந்த முடிவா?

stella / 2 years ago

Advertisement

Listen News!


கமல் ஹாசனின் விக்ரம் படத்தை அடுத்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ் விஜய்யின் லியோ படத்தை இயக்கி வருகின்றார்.இப்படத்தில் விஜய்யுடன்  த்ரிஷா, சஞ்சய் தத், மிஷ்கின், கவுதம் மேனன், ப்ரியா ஆனந்த், மடோனா செபாஸ்டியன், அர்ஜுன் எனப் பல நடிகர்கள் நடித்து வருகின்றனர் .படப்பிடிப்பு முடியப் போகும் நேரத்தில் பாலிவுட் இயக்குநர் அனுராக் கஷ்யப்பையும் அழைத்து வந்து நடிக்க வைத்துக் கொண்டிருக்கிறாராம் 

என்னய்யா லோகேஷ், லிஸ்ட்டு ரொம்ப பெருசா போய்க்கிட்டே இருக்கிறதே என விஜய் ரசிகர்கள் கலக்கத்தில் இருக்கிறார்கள். ஊரில் உள்ள அனைவரும் நடித்தால் விஜய்யின் ஸ்க்ரீன் பிரசன்ஸ் என்னவாகும் என்பதே அவர்களின் கலக்கத்திற்கு காரணம்.லியோவின் வி.எஃப்.எக்ஸ். வேலை சென்னையில் அல்ல மாறாக வெளிநாட்டில் நடக்கவிருக்கிறது. அதற்காக மட்டும் ரூ. 15 கோடியை ஒதுக்கி வைத்திருக்கிறார்களாம்.


தற்போது சென்னையில் படப்பிடிப்பு நடந்து வருகிறது. இதையடுத்து காஷ்மீரில் பேட்ச் ஒர்க் நடக்கிறது. அதை முடித்துக் கொண்டு தான் வெளிநாட்டிற்கு செல்கிறார். ஆனால் தினமும் ஒரு நடிகர் அல்லது நடிகையை புதிதாக சேர்ப்பது தான் லைட்டா பயமாக இருக்கிறது லோகேஷ் கனகராஜ் என்கிறார்கள் தளபதி ரசிகர்கள்.


இதற்கிடையே லியோ படத்தில் தனுஷும், பிரபல தெலுங்கு நடிகரான ராம் சரணும் கவுரவத் தோற்றத்தில் வருகிறார்கள் என தகவல் வெளியாகி தீயாக பரவியது. விசாரித்துப் பார்த்ததில் அந்த தகவலில் உண்மை இல்லை என்பது தெரிய வந்திருக்கிறது.விஜய்யின் லியோ படத்தில் தனுஷ் கெத்து காட்டப் போகிறார் என்று முன்பும் கூட வதந்தி பரவியதும் என்பது குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement