• Jul 25 2025

"லோகேஷ் கனகராஜ் LCU ன்னு சொல்லுவாங்கல்ல அது மாதிரி தான் இதுவும்- அவரோட வோய்ஸ் மட்டும் கேட்கும்- உதயநிதி கொடுத்த அப்டேட்

stella / 2 years ago

Advertisement

Listen News!

இயக்குநர் மு. மாறன், இயக்கத்தில் நடிகர் உதயநிதி,பிரசன்னா, ஸ்ரீகாந்த், வசுந்தரா, ஆத்மிகா, சதீஷ், பூமிகா சாவ்லா ஆகியோரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் கண்ணை நம்பாதே" க்ரைம் த்ரில்லர் ஜானரில் உருவாகியுள்ள இப்படம் மார்ச் மாதம் 17ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், கண்ணை நம்பாதே படத்தின் நடிகர் உதயநிதி ஸ்டாலின், இயக்குநர் மு. மாறன் மற்றும் நடிகை ஆத்மிகா ஆகியோர் பிரபல சேனலுக்காக பிரத்யேக பேட்டி ஒன்றையும் அளித்துள்ளனர். இதில், கண்ணை நம்பாதே திரைப்படம் குறித்து பல சுவாரஸ்ய தகவல்களை அவர்கள் பகிர்ந்து கொண்டனர்.


கண்ணை நம்பாதே திரைப்படம் குறித்து பேசிய உதயநிதி ஸ்டாலின், "லோகேஷ் கனகராஜ் LCU ன்னு சொல்லுவாங்கல்ல. அந்த மாதிரி மாறன் யூனிவெர்ஸ் இருக்கு. அருள்நிதியோட வாய்ஸ் மட்டும் இதுல வருது. இரவுக்கு ஆயிரம் கண்கள் படத்துல அருள்நிதி வர்ற கால் டாக்ஸி கேரக்டர் இதுல வருது" என தெரிவிக்க, மாறன் யூனிவெர்ஸ் குறித்து இயக்குநர் மு. மாறனிடமே நெறியாளர் கேள்வி எழுப்பி இருந்தார்.


இது பற்றி பேசிய மு. மாறன், "அது தேவைப்பட்டுச்சு. இந்த கேரக்டருக்கும் அந்த கேரக்டருக்கும் ஒரு ஒற்றுமை இருக்கு. Crime வெச்சு பார்க்கும் போது அவரோட Presence இருந்தா நல்லா இருக்கும்ன்னு தோணுச்சு. நான் கதையை முழுசா சொன்னேன். அப்புறம் அவரு வந்து பண்ணி குடுத்தாரு" என தெரிவித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement