• Jul 24 2025

ஆண்டவரே இது ஒண்ணும் பிக்பாஸ் இல்லை... நீங்க சொன்னதும் கை தட்டுறதற்கு... கமல்ஹாசனை வச்சு செய்யும் ரசிகர்கள்.. வைரல் வீடியோ..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து கொண்டிருப்பவர் நடிகர் கமலஹாசன். சினிமாவில் படு பிசியாக வலம் வந்து கொண்டிருக்கும் இவர் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி வருகின்றார். இதற்கு உதாரணமாக 'பிக்பாஸ்' நிகழ்ச்சியை கூறலாம்.


மேலும் இவர் சினிமா தவிர்த்து அரசியலிலும் அதிக ஈடுபாடு காட்டி வருகிறார். அந்த வகையில் இவர் மக்கள் மைய கட்சி ஒன்றை தொடங்கி இருக்கிறார். பின்னர் திமுக, காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணியில் சேர்ந்தார். கமல்ஹாசன் முன்னர் திராவிடம் மாற்று கருத்து என்று கூறியிருந்தார். ஆனால் பின்னர் இவரே திராவிடம் குறித்து பேச தொடங்கினார்.


இந்த நிலையில் சமீபத்தில் கமலஹாசன் ஆங்கில ஊடகம் ஒன்றிற்கு பேட்டி அளித்திருக்கின்றார். அதில் அவரிடம் நிகழ்ச்சித் தொகுப்பாளர் "தமிழ்நாட்டின் திராவிடமாக இருந்த நீங்கள் தற்போது தென்னிந்தியாவின் திராவிடமாக திகழ்கிறீர்கள்" என்று கூறினார். அதற்கு உடனே கமலஹாசன் குறுக்கிட்டு திராவிடம் என்பது தமிழ்நாட்டிற்கு மட்டும் இல்லை. இந்தியாவிற்கு பொதுவான ஒன்று" என்று கூறி இருக்கின்றார்.


அதுமட்டுமல்லாது இவ்வாறு கூறிவிட்டு அங்கிருந்த பார்வையாளர்களையும் திரும்பிப் பார்த்தார். ஆனால், அங்கிருந்த ஒருவர் மட்டும் தான் கமல்ஹாசன் பேசியதற்கு கைதட்டி இருக்கிறார். இவரின் இந்த வீடியோ ஆனது தற்போது சமூக வலைத்தளங்களில் படு வைரல் ஆகி வருகிறது. 


இந்த வீடியோவைப் பார்த்த ரசிகர்கள் பலரும் கமல்ஹாசனை கலாய்த்து வருகிறார். அதாவது "இது ஒன்னும் பிக்பாஸ் நிகழ்ச்சி இல்லை. நீங்கள் நுழைந்த உடனே கைதட்டுவதற்கும், பேசும்போதெல்லாம் கைதட்டுவதற்கும்" என்று கூறி கிண்டல் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement