• Jul 23 2025

கவினின் வருங்கால மனைவியோடு லாஸ்லியாவிற்கு இப்படி ஒரு உறவா..? தீயாய்ப் பரவும் புகைப்படம்... அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

'சரவணன் மீனாட்சி' சீரியலின் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் கவின். சீரியல்களில் நடித்து வந்த கவின் ‘நட்புன்னா என்னன்னு தெரியுமா’ என்ற படத்தின் மூலம் சினிமாவில் ஹீரோவாகவும் அறிமுகமானார்.


இப்படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியைப் பெற்றுக் கொடுக்காவிட்டாலும் லிப்ட், டாடா படத்தின் மூலம் மென்மேலும் பிரபலமானார். அதுமட்டுமல்லாது கவின் 2019-ஆம் ஆண்டு கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியிலும் போட்டியாளராக கவின் பங்கேற்றிருந்தார்.


அந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற சக போட்டியாளரான லாஸ்லியாவுடன் கவினுக்கு காதல் ஏற்பட்டது. ஆனால் அந்த நிகழ்ச்சியிலிருந்து வெளியேறியதும் இருவரும் பிரிந்து கொண்டார்கள். 


இந்த நிலையில் கவினுக்கு வரும் ஆகஸ்ட் 20-ஆம் தேதி மோனிகா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. அத்தோடு பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு போகும் முன்னரே கவினுக்கு மோனிகாவுடன் காதல் இருந்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.


இதனைத் தொடர்ந்து தற்போது மற்றுமோர் தகவல் வெளியாகி இருக்கின்றது. அதாவது லாஸ்லியாவிற்கு ஸ்டைலிஸ்ட்-ஆக மோனிகா டேவிட் பணியாற்றி இருக்கிறார். எனவே லாஸ்லியாவிற்கும், மோனிகாவிற்கும் ஏற்கெனவே நட்புறவு இருந்துள்ளமை தெரிகிறது.

இந்நிலையில் லாஸ்லியாவுடன் கவினின் வருங்கால மனைவி மோனிகா எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் தற்போது இணையத்தில் கசிந்து வைரலாகி இருக்கிறது. இதைப் பார்த்த ரசிகர்கள் பலரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.


Advertisement

Advertisement