• Jul 25 2025

காதல் தோல்வி...3 தடவ கல்யாணம் பண்ணி வெச்சிட்டாங்க...முக்கிய பிரபலத்திடம் உண்மையை போட்டுடைத்த டிஜே பிளாக்

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியின் அனைத்து ரியாலிட்டி ஷோக்களும் வெற்றிகரமாக செல்வதற்கு முக்கிய காரணமாக இருப்பவர் டிஜே பிளாக். இவர் ரியாலிட்டி ஷோக்களின் போது சூழ்நிலைக்கு தகுந்தாற்போல் பிண்ணனியில் காமெடி நடிகர்களின் குரல்களை ஒலிக்க விட்டு அவர்களை கலாய்ப்பதில் கைதேர்ந்தவராக இருக்கிறார். 


இவ்வாறு இருக்கையில் டிஜே பிளாக் புதுக் கார் ஒன்றினை வாங்கி உள்ளார்.அதற்கு மாகாபா ஆனந்த் மற்றும் பிரியங்காவும் சென்றுள்ளனர்.இவர் காதல் தேல்வியால் இருந்த போதும் இவருக்கு ஆறுதலாக இருந்தது மாகாபா ஆனந்த் மற்றும் பிரியங்கா என்று சொல்லப்படுகின்றது.


இந்த நிலையில், டிஜே பிளாக் கார் வாங்கி உள்ள சூழலில், அவரது காரில் இருந்தபடி சிவாங்கி பகிர்ந்துள்ள வீடியோ ஒன்று இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.. சமீபத்தில் புதிய கார் வாங்கி உள்ள டிஜே பிளாக், அதனை ஷூட்டிங் ஸ்பாட்டில் கொண்டு வந்ததாக தெரிகிறது. அப்போது, சிவாங்கி உள்ளிட்ட நண்பர்கள் சிலரும் அந்த காருக்குள் இருந்துள்ளனர்.


"பிளாக் அண்ணா புது வண்டி சூப்பர்ண்ணே" என சிவாங்கி கூற, காரின் பின்பக்கம் இருந்தவர்கள் அடுத்து கல்யாணம் தான் என கூறுகின்றனர். உடனே சிவாங்கியும், "ஆமா அடுத்து கல்யாணம்" என ஜாலியாக குறிப்பிடுகிறார். "எனக்கு ஏற்கனேவே 3 கல்யாணம் ஆயிடுச்சு யூடியூப்ல" என்றும் சிரித்துக் கொண்டே  சொல்கிறார் டிஜே பிளாக். இப்படியே கலகலப்பாக அமர்ந்து டிஜே பிளாக்குடன் தான் பேசிய வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்துள்ளார் சிவாங்கி.



Advertisement

Advertisement