• Sep 13 2025

"அன்பு மகத்தானது"... என்னது அறம் முடிந்து இப்போ அன்பா..? பிக்பாஸ் விக்ரமனைக் கலாய்த்து தள்ளும் ரசிகர்கள்..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பான ரியாலிட்ரி ஷோவான பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் பிரபல்யமானவர் தான் விக்ரமன். அரசியல் பிரபலம் என்ற அடையாளத்தோடு இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இவர் தான் வெற்றியாளர் ஆவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அசீம் வெற்றி பெற்றதோடு இவர் இரண்டாம் இடத்தையும் பெற்றுக் கொண்டார்


இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் "அறம் வெல்லும்" எனக்கூறி ரசிகர்களிடம் பிரபலமான விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் இணை செய்தி தொடர்பாளர் விக்ரமன் மீது பெண் வழக்கறிஞர் கிருபா முனுசாமி தன்னைக் காதலித்து ஏமாற்றி பணம் பறித்து விட்டதாக கூறி ஏற்கெனவே புகார் ஒன்றினை முன்வைத்துள்ள நிலையில் சமீபகாலமாக பல குற்றச்சாட்டுகளை தொடர்ந்து முன்வைத்து வருகின்றார். 

அதிலும் குறிப்பாக 15 பெண்களை விக்ரமன் காதலித்து விட்டு ஏமாற்றி விட்டார் என கூறியிருந்தமை பலருக்கும் ஆச்சர்யத்தைக் கொடுத்திருந்தது. அதுமட்டுமல்லாது இதனால் விக்ரமன் ரசிகர்கள் கூட விக்ரமன் மீது பயங்கர கோபத்தில் உள்ளனர்.


இவ்வாறான சர்ச்சைகளுக்கு மத்தியில்  தற்போது விக்ரமன் தனது இன்ஸ்டா பக்கத்தில் "எளிய மனிதர்களின் அன்பு மகத்தானது" என்ற டைட்டிலுடன் வீடியோ ஒன்றினை வெளியிட்டிருக்கின்றார். அதாவது குடியிருப்பு ஒன்றில் வசிக்கும் மக்கள் விக்ரமனிற்கு தங்களது அன்பை வெளிப்படுத்தும் விதமாக கிப்ட் ஒன்றினை அனுப்பி வைத்துள்ளார்கள். அந்த வீடியோவையே அவர் தற்போது வெளியிட்டிருக்கின்றார்.

இதனைப் பார்த்த ரசிகர்கள் "அறம் முடிந்து இப்போ அன்பா..?" எனக்கேட்டு கலாய்த்து வருகின்றனர்.


Advertisement

Advertisement