• Jul 23 2025

வருகிறது லவ் மாக்டெயில் 3 திரைப்படம்..! அட்டகாசமான அப்டேட் கொடுத்த இயக்குநர் கிருஷ்ணா - உற்சாகத்தில் ரசிகர்கள்!

Jo / 2 years ago

Advertisement

Listen News!

டார்லிங் கிருஷ்ணா லவ் மாக்டெயில் 3 படம் குறித்த அறிவிப்பை வெளியிட்டு உள்ளார்.

கன்னட சினிமாவில் வெற்றிப் பெற்ற படங்களில் ஒன்று லவ் மாக்டெயில். இந்த படத்தை டார்லிங் கிருஷ்ணா இயக்கி, நடித்தார். நாயகியாக மிலனா நாகராஜ் நடித்து இருந்தார்.

இந்த படத்தில் நடித்த போது இவர்களுக்கு இடையே காதல் மலர்ந்து திருமணம் செய்து கொண்டனர். முதல் பகுதியின் வெற்றியை தொடர்ந்து இரண்டாம் பகுதி ரிலீஸானது.

இந்நிலையில் நேற்று உகாதி பண்டிகையையொட்டி லவ் மாக்டெயில் 3 படம் குறித்த அறிவிப்பை கிருஷ்ணா அறிவித்தார். இது ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த ஜோடி 'லவ் மாக்டெய்ல் 3' எடுக்க சமூக வலைதளங்களில் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

இந்த படத்தையும் கிருஷ்ணாவே இயக்கி நடிப்பார் என சொல்லப்படுகிறது. விரைவில் படப்பிடிப்பு தொடங்கும் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

'லவ் மாக்டெயில்' திரைப்படம் ஜனவரி 2020 ஆம் ஆண்டு வெளியானது. தியேட்டர்களில் பெரும் வரவேற்பை பெற்ற இப்படம், ஓடிடியிலும் ஹிட்டானது. 


லவ் மாக்டெயில்' வெற்றிக்குப் பிறகு, 'டார்லிங்' கிருஷ்ணா அதன் தொடர்ச்சியான 'லவ் மாக்டெய்ல் 2' படத்தை பிப்ரவரி 2022 இல் திரைக்குக் கொண்டு வந்தார்.

Advertisement

Advertisement