• Jul 25 2025

உன்னை விட எனக்கு யாரு இருக்காங்க- தொகுப்பாளினி ப்ரியங்கா வெளியிட்ட லவ் வீடியோ-

stella / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் தொலைக்காட்சியில் சூப்பர் சிங்கர் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி பெரும் பிரபலமடைந்தவர் தான் தொகுப்பாளினி ப்ரியங்கா. இவர்  நகைச்சுவையாக பேசுவது மட்டுமின்றி பாடல் பாடுவது , நடனமாடுவது உள்ளிட்ட பல கலைகளில் திறமை வாய்ந்தவர். 

இவர் தன்னுடன் தொலைக்காட்சியில் வேலை பார்த்த பிரவீன் குமார் என்பவரை திருமணம் செய்துக்கொண்டார். இவர்கள் இருவரும் சேர்ந்து வாழாததால் விவகாரத்து வதந்திகள் அவ்வப்போது வெளியாகும். ஆனால், அதை பற்றியெல்லாம் கவலைப்படாத பிரியங்கா தனக்கு பிடித்த விஷயத்தில் கவனம் செலுத்தி வருகிறார். 


இது தவிர பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியிலும் பங்கு கொண்டு இரண்டாம் இடத்தைப் பெற்றவர்.இந்நிலையில் தற்போது தன் தம்பியின் மகளுடன் எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் கியூட் வீடியோ ஒன்றை வெளியிட்டு உன்ன விட்டா எனக்கு யாரடி? என கேப்ஷன் கொடுத்து பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருவதையும் காணலாம்.



Advertisement

Advertisement