• Jul 26 2025

பட்டுப் புடவையில் தேவதை போல் பவனி வரும் லொஸ்லியா... ஜொள்ளு விடும் ரசிகர்கள்...!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டீவியில் ஒளிபரப்பாகும் மக்கள் மத்தியில் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று 'பிக்பாஸ்'. இந்த நிகழ்ச்சியானது 5 சீசன்களை வெற்றிகரமாக கடந்து விட்ட நிலையில் தற்போது இதன் 6 ஆவது சீசன் ஆரம்பிக்கப்பட இருக்கின்றது.


உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்குகின்ற இப்பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 3 இன் மூலம் அறிமுகமானவர் தான் நடிகை லொஸ்லியா. இந்த நிகழ்ச்சியில் இவரின் குறும்புத்தனமான செயற்பாடுகளின் வாயிலாக அவருகென்று தனி ரசிகர்கள் பட்டாளமே உருவானது.


இதனை தொடர்ந்து கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்கிற்கு ஜோடியாக 'பிரண்ட்ஷிப்' என்ற படத்தில் நடித்து அசத்தி இருந்தார். அதனைத் தொடர்ந்து தற்போது மேலும் ஒரு சில படங்களில் நடித்து வருகிறார். எனினும் இவரிற்கு கிடைக்கின்ற பட வாய்ப்புக்கள் குறைவாகவே இருக்கின்றன.


இதன் காரணமாக சமூகவலைதளபக்கங்களில் அதிகளவில் தன்னுடைய பொழுதைக் கழித்து வருகின்றார். அதில் தான் எடுக்கும் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். அந்த வகையில் தற்போதும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சேலை அணிந்து புகைப்படங்களை வெளியிட்டிருக்கின்றார்.


அப்புகைப்படங்களில் இவர் தேவதை போன்று ஜொலிக்கின்றார். அதுமட்டுமல்லாது உதட்டில் புன்னகை ததும்பும் வகையில் க்யூட்டான போஸ் கொடுத்தும் இருக்கின்றார். இதனைப் பார்த்த ரசிகர்கள் ஜொள்ளு விட்டு வருகின்றனர்.


Advertisement

Advertisement