• Jul 26 2025

முன்னணி நடிகரை சிறப்பு விருந்தினராக களமிறக்கும் லைகா.. 'PS 2' தமிழ்நாட்டு உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம்.. அடுத்தடுத்து வெளிவந்த அப்டேட்டுகள்..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

மணிரத்தினத்தின் கனவு படமான  'பொன்னியின் செல்வன்' படத்தின் 2ஆம் பாகமானது ஏப்ரல் 28ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. இதனையடுத்து இரண்டாவது பாகத்தை அவர் எப்படி இயக்கி இருப்பார்? என்பதை தெரிந்து கொள்ள பலரும் ஆர்வமாக உள்ளனர்.


மேலும் இப்படம் வெளியாக இன்னும் ஒரு மாதமே எஞ்சியுள்ள நிலையில், படத்தின் ப்ரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்நிலையில் தற்போது இந்தப் படத்தின் தமிழக திரையரங்கு விநியோக உரிமையை நடிகரும், விளையாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. 


அதுமட்டுமல்லாது வரும் 29 ஆம் தேதி  இசை வெளியீட்டு விழா நடைபெற உள்ளது. அதாவது நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெறும் இந்தப் படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழாவில் கமல் ஹாசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு டிரைலர் மற்றும் இசையை வெளியிட இருப்பதாகவும் லைகா நிறுவனம் டுவிட்டரில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.


Advertisement

Advertisement