• Jul 25 2025

கோபியை பைத்தியமாக்கி விட்டு ஜாலியாக ஊர் சுற்றுகிறீங்களே மேடம்- பிரபல நகைக்கடையில் ராதிகா வெளியிட்ட வீடியோ

stella / 2 years ago

Advertisement

Listen News!

தொகுப்பாளராக சன் டிவியில் அறிமுகமான ரேஷ்மா பசுபுலேட்டி இதன் மூலம் கிடைத்த பிரபலத்தை வைத்து, சீரியல்களில் நடிக்க தொடங்கினார். அந்த வகையில் இவர் நடித்த 'வம்சம்', 'வாணி ராணி', 'மரகத வீணை', 'ஆண்டாள் அழகர்' போன்ற சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானது.

இதைத்தொடர்ந்து, பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்ட ரேஷ்மா, பின்னர் திரைப்படங்களிலும் நடிக்க துவங்கினார். அந்த வகையில் இவர் நடிகர் விஷ்ணு விஷால் மற்றும் சூரி நடித்த, 'வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்' படத்தில் நடித்த புஷ்பா கதாபாத்திரம் மிகவும் பிரபலமாக பேசப்பட்டது.


தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில், கோபியின் இரண்டாவது மனைவி ராதிகா கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த சீரியலுக்கும் இவருடைய நடிப்புக்கும் தொடர்ந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

இந்நிலையில் இவர் பிரபல நகைக் கடை ஒன்றின் திறப்பு விழாவுக்கச் சென்றுள்ளார் இது குறித்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ வைரலாகி வருகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement