• Jul 25 2025

ஜோஸ் ஆலுக்காஸ் குழுமத்தில்.. ஒன்றாக இணைந்த மாதவன்-கீர்த்தி சுரேஷ்..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் 'சாக்லேட்' பாயாக வலம் வருகின்ற மாதவன் சினிமாவில் எந்தளவிற்கு பிசியாக இருந்து வருகின்றாரோ அந்த அளவிற்கு பிஸினஸ் சார்ந்த பிற விடயங்களிலும் கவனம் செலுத்தத் தவறுவதில்லை. அந்தவகையில் தற்போது ஜோஸ் ஆலுக்காஸ் குழுமத்தின் பான் இந்தியா பிராண்ட் அம்பாசிடராக மாதவன் தேர்வுசெய்யப்பட்டுள்ளார். 


அதுமட்டுமல்லாது "தங்கம் மற்றும் வைர நகைகளுக்கான ஜூவல்லரி பிராண்ட் அம்பாசிடராக நடிகை கீர்த்தி சுரேஷ் தொடர்வார்" எனவும் ஜோஸ் ஆலுக்காஸ் குழுமம் தெரிவித்துள்ளது. 


இதுகுறித்து கூறுகையில் "தொழிலில் நேர்மையின் சின்னமாக விளங்கும் ஜோஸ் ஆலுக்காஸ் பிராண்ட் உடன் இணைந்து செயல்படுவதில் மகிழ்ச்சி அளிப்பதாக" மாதவன் தெரிவித்துள்ளார்.


அதேபோன்று கீர்த்தி சுரேஷ் கூறுகையில் "அதிகரித்து வரும் பெண்களின் நகை தேவைகளை ஜோஸ் ஆலுகாஸ் திருப்தி செய்கிறது" எனத் தெரிவித்துள்ளார்.


Advertisement

Advertisement