• Jul 24 2025

நான் ரெடி தான் பாடலுக்கு செம குத்துக் குத்திய மடோனா செபஸ்ரியான்- வெளியாகிய ரியர்ஷல் வீடியோ

stella / 1 year ago

Advertisement

Listen News!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த 19ஆம் தேதி லியோ திரைப்படம் வெளியானது. விஜய், த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் மேனன், ப்ரியா ஆனந்த் என பலர் நடித்திருந்த அந்தப் படம் விஜய் ரசிகர்களை ரொம்பவே திருப்திப்படுத்தியிருக்கிறது. 

அதேசமயம் ரசிகர்களில் மற்றொரு தரப்பினரிடமிருந்து கலவையான விமர்சனங்களே கிடைத்திருக்கின்றன.இருப்பினும் இதுவரை மொத்தம் 460 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்திருக்கிறது. மேலும் லியோ படத்தின் வெற்றி விழா நவம்பர் ஒன்றாம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடக்கவிருக்கிறது.


 இதில் விஜய் கலந்துகொண்டு ஏதேனும் குட்டி ஸ்டோரி சொல்வாரா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் எழுந்துள்ளது.மேலும்  இவ்விழாவிற்காக காவல்துறை சார்ப்பில் இருந்து அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 200 முதல் 300 கார்களுக்கு மட்டுமே அனுமதி அளித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில் இப்படத்தில் விஜய்யின் தங்கை எலிசா தாஸ் என்னும் கதாப்பாத்திரத்தில் நடித்த மடோனா,லியோ படத்தில் இடம்பெற்ற நான் ரெடி தான் பாடலுக்கு நடன இயக்குநர் ஏஜன்ட் ரீனாவுடன் சேர்ந்து நடனமாடி ரியர்ஷல் பார்த்திருக்கின்றார்.இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டாகி வருவதைக் காணலாம்.


Advertisement

Advertisement