• Jul 24 2025

தமிழனை துரத்தி அடிக்கும் வட இந்தியர்கள், இப்படியே போனால் பிச்சை தான் எடுக்கணும் - மதுரை முத்துவின் வைரல் வீடியோ

Jo / 2 years ago

Advertisement

Listen News!

தமிழனை துரத்தி அடிக்கும் வட இந்தியர்கள், இப்படியே போனால் பிச்சை தான் எடுக்கணும்- மதுரை முத்து கோபமான பேச்சு

சினிமா உலகில் நடிகர்களை தாண்டி காமெடி செய்யும் பிரபலங்களை மக்கள் அதிகம் ஆதரிப்பார்கள். அப்படி விஜய் தொலைக்காட்சியில் நிறைய நிகழ்ச்சியில் தோன்றி மக்களை சிரிக்க வைத்து வருபவர் தான் மதுரை முத்து.

இவர் எப்போதும் மிகவும் காமெடியாக நிறைய விஷயங்களை மக்களிடம் பதிவு செய்வார், சில ரீச் ஆகியுள்ளன. அப்படி இப்போது ஒரு முக்கியமான விஷயம் குறித்து வீடியோவாக வெளியிட மக்களால் அதிகம் கவனிக்கப்பட்டு வருகிறது.

ஒரு நாடு ஒரே ரேஷன், தமிழகத்திற்கு அதிகம் வருகை தந்த வட இந்தியர்கள் போன்ற விஷயங்கள் தமிழக மக்களை நிறைய பாதித்து வருகிறது. அந்த வகையில் திருப்பூரில் நடந்த ஒரு சம்பவம் குறித்து மதுரை முத்து பேசியுள்ளார்.

அதில் அவர், திருப்பூரில் சுமார் 100 பேர் கத்தி, பெல்ட், மரக்கட்டைகளை கொண்டு நம் தமிழக இளைஞர் ஒருவரை தாக்கும் வீடியோவை பார்த்தேன். தமிழகத்திற்கு வேலை கேட்டு வந்தவர்கள் முதலில் 10% தான் இருந்தார்கள். இப்போது திருப்பூரில் மட்டும் 65% பேர் வட மாநிலத்தவர் உள்ளனர்.

பால் அபிஷேகம் செய்யும் நமக்கு இப்போது அவர்கள் பால் ஊத்த போகிறார்கள், இப்படியே போனால் நாம் பிச்சை தான் எடுக்க வேண்டும், உஷாராக இருங்கள் என பேச அந்த வீடியோவை ரசிகர்கள் பலரும் ஷேர் செய்து வருகிறார்கள்.இது தற்போது வைரலாகி வருகின்றது.


Advertisement

Advertisement