• Jul 25 2025

ஐஸ்வர்யாவைத் தேடிச் செல்லும் மஹா மற்றும் சூர்யா- கௌதமின் திருமணம் நடைபெறுமா?- பரபரப்பான திருப்பங்களுடன் Aaha Kalyanam Promo

stella / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் ஆஹா கல்யாணம்.இந்த சீரியலில் கௌதம்,ஐஸ்வர்யா திருமண ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இந்த நிலையில் இது குறித்த ப்ரோமோ வெளியாகியுள்ளது.

அதாவது ஐஸ்வர்யாவைக் கூட்டிக் கொண்டு வரச் சொல்ல,மஹா போய் பார்க்கின்றார். ஆனால் அங்கே ஐஸ்வர்யா இல்லை என்பதால் மஹா ஐஸ்வர்யாவைக் காணவில்லை என்று வந்து சொல்கின்றார்.


இதைக் கேட்டவுடன் கௌதமின் அம்மா இவளுக்கு ஒரே கல்யாணத்தை விட்டு ஓடுறது தானே வேலை என்கின்றார். அப்போது கோடிஸ்வரி ஐஸ்வர்யாவைக் காணவில்லை என்று அழுகின்றார்.

இதனால் மஹா, ஐஸ்வர்யாவைத் தேடிப் போக சூர்யாவும் ஐஸ்வர்யாவைத் தேடிப் போகின்றார்.இதனால் ஐஸ்வர்யாவை மஹாவும் சூர்யாவும் கூட்டிட்டு வருவார்களா என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement