• Jul 25 2025

சீதா குடுப்பத்தை அசிங்கப்படுத்திய மகா..கோபத்தில் வீட்டை விட்டு வெளியேறிய மதுமிதா .. பரப்பரப்பு திருப்பங்களுடன் சீதா ராமன் அப்டேட்!

Jo / 2 years ago

Advertisement

Listen News!

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சீதாராமன். 

இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மீராவின் காதலன் சத்யா என்ட்ரி கொடுக்கிறார். உடனே மகாலட்சுமி, உன்னை யாரு இங்கே அழைத்தது என அவனிடம் சண்டைக்கு நிற்க, அங்கே வந்த மீரா நான் தான் அழைத்தேன் உங்களுக்கு வேண்டப்பட்டவர்களை நீங்கள் அழைத்த மாதிரி, எனக்கு வேண்டப்பட்டவர்களை நான் அழைத்தேன் என சொல்லி ஷாக் கொடுக்கிறாள். 

அதன் பிறகு எல்லோரும் உள்ளே சென்றதும், மீரா சத்யாவிடம் நீ எதுக்கு இங்கே வந்த என கேட்டு இருவரும் பேசிக் கொள்கிறார்கள். இந்த நிலையில் இவர்கள் பழைய காதலர்கள் என்ற விஷயங்கள் தெரிய வருகிறது.

அடுத்து மகாலட்சுமி, மதுமிதா தான் ராமின் மனைவி என்பது போல தன்னுடைய நண்பர் ஒருவரை வைத்து பேசி ராஜசேகர் குடும்பத்தை அசிங்கப்படுத்துகிறார்.

இதனிடையே ராஜசேகர் மதுமிதாவை கூப்பிட்டு உன்னால சீதா வாழ்க்கை தான் கெட்டுப் போகுது என சொல்லி திட்டி கோபப்படுகிறார்.

அதன்பிறகு சுபாஷ் அழைத்து வந்த பத்திரிக்கையாளர்கள், மதுமிதாவிடம் வந்து நீங்கள் தானே ராமின் மனைவி..உங்களை போட்டோ எடுக்க வேண்டும் என சொல்கிறார்கள். இதைக் கேட்ட மதுமிதா கோபமடைந்து உடனடியாக இந்த இடத்தை விட்டு கிளம்பியாக வேண்டும் என, தனது கழுத்தில் இருக்கும் நகைகளை கழட்டி வைத்து கிளம்புகிறாள். 

இது தெரியாமல் மகாலட்சுமி எல்லாம் தன்னுடைய திட்டத்தின்படி சரியாக நடக்கிறது என சந்தோஷப்பட்டுக் கொண்டிருக்க, வெளியில் ராம் மற்றும் சீதா ரிசப்ஷனுக்கு வந்தவர்களிடம் கைகோர்த்துக்கொண்டு பேசிக் கொண்டிருக்கின்றனர். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்கப்போவது என்ன என்பது குறித்து பொறுத்திருந்து பார்ப்போம்.

Advertisement

Advertisement