• Jul 25 2025

செல்லம்மா தான் தன்னுடைய மகள் என அறிந்த மகேந்திரன்- உணர்வுபூர்வமான திருப்பங்களுடன் செல்லம்மா சீரியல் ப்ரோமோ

stella / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் செல்லம்மா. கணவரால் கைவிடப்பட்டு ஒரு பெண் குழந்தையுடன் தனிமையில் வாழும் பெண்ணின் பாசப் போராட்டத்தையே இந்த சீரியல் கூறி நிற்கின்றது. 

செல்லம்மாவின் அப்பாவான மகேந்திரனுக்கு தன்னுடைய மகள் இறந்து விட்டாள் என்ற எண்ணத்திலே தான் இருக்கிறார். இருந்தாலும் செல்லம்மாவைத் தன்னுடைய பிள்ளை போல பார்த்து வருகின்றார்.

இப்படியான நிலையில் செல்லம்மா தன்னுடைய அப்பாவுக்கு ஆண்டுநினைவு தினம் செய்யும் போது அந்த புகைப்படத்தை மலர் எடுததுக் கொண போய் மகேந்திரனிடம் கட்டுகின்றார்.

மகேந்திரன் அந்த போட்டோவைப் பார்த்ததும் செல்லம்மாவிடம் கொண்டு போய் காட்டி கேட்கின்றார். போட்டோவைப் பார்த்த செல்லம்மா வளர்த்த அப்பாவின் புகைப்படத்தை பார்த்து இது தான் எங்களுடைய அப்பா என்று கூறுகின்றார். இதனால் சந்தோஷத்தில் மகேந்திரன் தன்னுடைய மனைவியிடம் போய் செல்லம்மா தான் தன்னுடைய மகள் என்று கூறுகின்றார்.

இதனால் இனிமேல் என்ன நடக்கப் போகின்றது என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement