• Jul 26 2025

ரச்சிதாவின் கையை கிழித்த மகேஷ்வரி- ஓடி வந்து மருந்து கட்டி விட்ட ராபேட் மாஸ்டர்- அடேங்கப்பா என்ன ஒரு காதல்

stella / 2 years ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி 25 நாட்களைக் கடந்து விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. 21 போட்டியாளர்களுடன் கடந்த மாதம் தொடங்கிய இந்நிகழ்ச்சியில் இருந்து இதுவரை 3 போட்டியாளர்கள் வெளியேறி உள்ளனர்.அதில் சாந்தி மற்றும் அசல் கோளார் ஆகியோர் எலிமினேட் செய்யப்பட்டு வெளியேறினர்.

 மறுபுறம் ஜிபி முத்து மகனின் உடல்நிலை காரணமாக பாதியிலேயே நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார்.மேலும் ஒவ்வொரு வாரமும் வித்தியாசமான டாஸ்குகள் கொடுக்கப்பட்டு வருகின்றது. இதனால்  போட்டியாளர்கள் தமக்கிடையில் அடிக்கடி மோதலில் ஈடுபட்டும் வருகின்றனர்.


இந்த நிலையில் தற்பொழுது அந்த டிவி மற்றும் இந்த டிவி என்னும் டாஸ்க் நடைபெறுகின்றது. அதில் இதில் இரண்டு டீமாக பிரிந்து விளையாடுகின்றனர்.அதாவது இரண்டு வெவ்வேறு நிறஙக்களில் இருக்கும் ஸ்டிக்கர்களை எதிரணியினர் மேல் ஒட்ட வேண்டும்.அவ்வாறு விளையாடும் போது மகேஷ்வரியின் நகம் ரச்சிதாவின் கையைக் கிளித்து விட்டது. இதனால் சிறிய காயம் ரச்சிதாவுக்கு ஏற்பட்டுள்ளது.


இதனை அடுத்து ராபேட் மாஸ்டர் ரச்சிதாவுக்கு மருந்து போட்டு அவருடைய கையினுடைய காயத்தைக் கட்டி விடுகின்றார். இதனைப் பார்த்த மைனா அப்படி மூஞ்சிய வச்சிருக்காத பார்க்க சலிக்கல என நக்கலடித்துள்ளார். இருப்பினும் ரச்சிதா செல்லமாக அழுது கொண்டே செல்கின்றார்.

Advertisement

Advertisement