• Jul 24 2025

ஹவுஸ்மேட்ஸை பிக்பாஸ் போல ப்ராங் செய்து ஏமாற்றிய மைனா நந்தினி- கடுப்பாகி திட்டிய அமுதவாணன்

stella / 2 years ago

Advertisement

Listen News!


பிக்பாஸ் நிகழ்ச்சியானது அதன் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.நிறைய சண்டைகள் மற்றும் விவாதங்கள் கூட அரங்கேறி, போட்டியாளர்கள் மத்தியில் சலசலப்பை உண்டு பண்ணி இருந்தாலும் அதனை எல்லாம் சரி செய்து விளையாடி வருகின்றனர்.

அத்தோடு இந்த வாரம் முழுவதும் பிரபலங்கள் பலரும் வீட்டுக்குள் வந்து வந்து செல்கின்றனர்.இந்நிலையில், வீட்டுக்குள் பிராங்க் செய்திருக்கிறார் மைனா. இதனால் வீடே கலகலப்பாகியிருக்கிறது.


கார்டன் பகுதியில் அனைவரும் அமர்ந்திருக்க, வீட்டுக்குள் விக்ரம் மற்றும் மைனா பேசிக்கொண்டிருக்கின்றனர். அப்போது, தனக்கு போர் அடிப்பதாக கூறுகிறார் மைனா. அப்போது பிக்பாஸிடம்,"வீட்டுக்கு வந்துட்டிங்களா நைனா, எல்லோரையும் டாஸ்க்கிற்கு கூப்பிடுங்க" என்கிறார் மைனா. 

அருகில் இருக்கும் விக்ரமன் "இப்போ டாஸ்க்கிற்கு கூப்டுவாறு" என்கிறார். "கூப்பிட்டா திட்டுவாங்களே" என மைனா சொல்ல, "திட்டுனா வாங்கிக்கோ" என்கிறார் விக்ரமன். இதனிடையே, "எல்லோரையும் உள்ள வர வைப்போமா?" என மைனா கேட்க, "டாஸ்க் இருக்குனு கூப்பிடுங்க" என்கிறார் விக்ரமன். 


அப்போது "எல்லோரும் வாங்க என சத்தமாக" அழைக்கிறார் மைனா. கார்டன் பகுதியில் இருந்த அனைவரும் அதனை கேட்டு எழுந்து நிற்கின்றனர். "என்ன ஆச்சு" என தங்களுக்குள் பேசியபடியே வீட்டுக்குள் வருகின்றனர் அனைவரும். அப்போது மைனா,"வெல்கம் டு பிக்பாஸ் ஷோ" என்கிறார்.

"எதுக்கு கத்துன" என அசீம் கேட்க, "விக்ரமன் கிட்ட எப்படி பேசுறதுனு சொல்லி காட்டிட்டு இருந்தேன்" என சிரித்தபடி சொல்கிறார் மைனா. "வேணும்னே கத்தி சொல்லிட்டு நடிக்கிறியா" அமுதவாணன் கேட்க, அனைவரும் சிரிக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement