• Jul 25 2025

வந்ததும் வராததுமாக விக்ரமனையே வெட்கப்பட வைச்ச டிடி- அலப்பறையைப் போட்ட மைனா நந்தினி

stella / 2 years ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் வீட்டிலிருந்து இறுதியாக ஏடிகே வெளியேறியுள்ளார்.இதனைத் தொடர்ந்து  பிக்பாஸ் வீட்டுக்குள் பொங்கல் விழா நடைபெறுகிறது. இதனால் போட்டியாளர்கள் அனைவரும் பாரம்பரிய உடை அணிந்திருக்கின்றனர். இதனிடையே தொகுப்பாளர் DD பிக்பாஸ் வீட்டுக்குள் வந்திருக்கிறார். 

அவருக்கு போட்டியாளர்கள் அனைவரும் உற்சாக வரவேற்பு அளித்திருக்கின்றனர். போட்டியாளர்களுடன் கலகலப்பாக பேசும் DD விக்ரமனிடம்,"அழகா இருக்கீங்க விக்ரமன்" எனச் சொல்கிறார். இதனை கேட்டு புன்னகைத்த விக்ரமன் நன்றி சொல்கிறார்.


அப்போது, மைனா,"விக்ரமன் பிறவி பலனையே அடைஞ்சிருப்பாரு" என கலகலப்பாக சொல்கிறார். இதனை கேட்டு அனைத்து போட்டியாளர்களும் சிரிக்கின்றனர். 

இதனிடையே, பேசிய பிக்பாஸ்,"DD வணக்கம். இந்த பிக்பாஸ் வீட்டுக்கு உங்களை வரவேற்பது மகிழ்ச்சி. ஹேப்பி பொங்கல்" எனச் சொல்ல, DDயும் பொங்கல் வாழ்த்து சொல்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement