• Jul 24 2025

ஐஸ்வர்யா ராஜேஷைத் தொடர்ந்து மக்களிடம் கெஞ்சிய மைனா நந்தினியின் கணவர்- கலாய்த்து வரும் நெட்டிசன்கள்

stella / 2 years ago

Advertisement

Listen News!

50 நாட்களை வெற்றிகரமாக கடந்து பிக் பாஸ் சீசன் 6 ஓடிக் கொண்டிருக்கிறது. ஆரம்பத்தில் போட்டியாளர்கள் ரசிகர்களை கவர்வதும், அதன் பிறகு கம்பளி போர்த்தி படுத்துத் தூங்குவதும் என்கிற நடைமுறை இந்த சீசனிலும் அப்படியே தொடர்கிறது.

 இந்த வாரம் நடந்த ஓப்பன் நாமினேஷனில் கதிர், குயின்ஸி, மைனா நந்தினி, ரச்சிதா, தனலட்சுமி மற்றும் ஜனனி உள்ளிட்ட 6 பேர் நாமினேட் ஆகி உள்ளனர். இதில் யார் முதலில் சேவ் ஆவார், யார் டாட்டா பை பை சொல்லி வீட்டுக்கு கிளம்புவார் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.


இதனால் மக்களின் வாக்குப்படி இந்த வாரம் மைனா நந்தினி பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறுவார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. காரணம் இவர் சன்டே எபிசோடில் ஆடியன்ஸ் ஒருவர் மைனா நந்தினியை பார்த்து பெயிட் ஹாலிடேஸ் எப்படி இருக்கு என கேட்டதற்கு, உங்களுக்கு புடிக்கலைன்னா வெளியே அனுப்பிடுங்க என பேசியிருந்தார். இந்நிலையில், அந்த திமிர் பேச்சுக்காக மைனா நந்தினி வெளியேற வேண்டும் என அவருக்கு ரசிகர்கள் ஓட்டே போடாமல் குயின்ஸியை விட கீழே வைத்துள்ளனர்.

இதனால் அவரது கணவரான லோகேஷ் தயவு செய்து என் செல்லக்குட்டி மைனாவுக்கு ஓட்டுப் போட்டுங்கள் என தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். இது ரசிகர்களிடையே வைரலாகி வருவதையும் காணலாம்.


Advertisement

Advertisement