• Jul 26 2025

மலையாள பிக்பாஸில் களமிறங்கும் ரீல்ஸ் பிரபலம் அமலா சாஜி- செம குஷியில் ரசிகர்கள்

stella / 2 years ago

Advertisement

Listen News!


தென்னிந்திய சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் ரியாலிட்ரி ஷோக்களில் ரசிகர்களைக் கவர்ந்த ஷோவாக இருப்பது பிக்பாஸ் ஆகும். இந்த நிகழ்ச்சியானது தமிழில் மட்டுமல்லாது தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் ,கன்னடம் எனப் பல மொழிகளில் ஒளிபரப்பாகி வருகின்றது. 

அந்த வகையில் தமிழ் பிக்பாஸின் சீசன் 6 நிகழ்ச்சியானது அண்மையில் தான் முடிவடைந்தது. இதில் அசீம் என்பவர் வெற்றியாளராகத் தேர்வு செய்யப்பட்டார்.இதன் அடுத்த சீசன் எப்போது தொடங்கும் என ரசிகர்கள் ஆவலாக இருக்கின்றனர்.


இப்படியான நிலையில் மலையாள பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியானது ஆரம்பிக்கப்படவுள்ளது. இதில் யூடியூப் பிரபலமும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டீவாக இருந்து வரும் அமலாசாஜியும் போட்டியாளராகப் பங்குபற்றவுள்ளதாக உறுதியான தகவல் வெளியாகியுள்ளது.


இதனால் அவருடைய ரசிகர்கள் வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர்.மேலும் இவர் ரீல்ஸ் வீடியோக்களை தனது குடும்பத்துடன் இணைந்தே செய்து வருகின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement