• Jul 25 2025

மாமா, இப்படியே இருந்துடாத நீ சிறந்த நடிகன்டா- விஜய் சேதுபதி சொன்னதை நிஜமாக்கிய சூரி

stella / 2 years ago

Advertisement

Listen News!

விடுதலை ட்ரெய்லர் வெளியான பிறகு, நடிகர் சூரிக்கு அனைத்து இடங்களில் இருந்து பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளது. பெரும்பாலும் காமெடி கதாபாத்திரங்களில் தோன்றி மக்களை சிரிக்க வைக்கும் சூரி, விடுதலை திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் சிறந்த கேரக்டரில் தோன்றுவது ட்ரெய்லர் மூலம் தெரிய வருகிறது.

இதனால், சிறந்த கதையமைப்பு கொண்ட திரைப்படங்களில், காமெடி என இல்லாமல் விடுதலை படத்தை போன்று அசத்தலான கதைக்களங்கள் கொண்ட குணச்சித்திர கதாபாத்திரங்களில் சூரி தோன்றுவார் என்றும் ரசிகர்கள் குறிப்பிட்டு வருகின்றனர்.


இந்த நிலையில் பிரபல சேனலுக்கு முன்பு ஒரு முறை நடிகர் விஜய் சேதுபதி அளித்திருந்த பிரத்யேக பேட்டியில், "சூரி என் நண்பன். வெண்ணிலா கபடி குழுவில் இருந்து எனக்கு அவன் பழக்கம். அவன் படத்துல நான் இருக்கிறது பெரிய சந்தோஷம். பிரமாதமா நடிச்சிருக்கான், நான் ஃபர்ஸ்ட் ஹாஃப் பார்த்துட்டேன். வெற்றி சார் காணிச்சாப்ல. அவன்கிட்ட ஒரு இன்னசென்ட் இருக்கு. ஒரு சிறந்த நடிகன் அவன். ரொம்ப வருஷமா சொல்லிட்டே இருந்தேன் மாமா, இப்படியே இருந்துடாத வேற வேற கேரக்டர் பண்ணுடா நீ. பெரிய டைரக்டர்ஸை போய் பாருடா. ஹீரோ ஆக்குறேனு சொல்ற மக்கு பசங்கள நம்பாம பெரிய டைரக்டர்ஸ போய் பாரு" என சூரியை பற்றி பேசி இருந்தார்.


அதே போல, விடுதலை படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் பேசி இருந்த சூரி, நடிகர் விஜய் சேதுபதி தன்னை பாராட்டியது குறித்தும், வெண்ணிலா கபடிக் குழு படத்தின் போது காமெடியன் என முடிவு செய்யாமல் சிறந்த நடிகன் என பாராட்டியதாகவும், எந்த கேரக்டர் கொடுத்தாலும் நடிக்க வேண்டும் என தன்னை முன்பே அறிவுறுத்தியது பற்றியும் சூரி குறிப்பிட்டுள்ளார்.


Advertisement

Advertisement