• Jul 24 2025

திருமணத்தை நிறுத்த கோயிலுக்கு வந்து கொண்டிருக்கும் மேனேஜர்- பதற்றத்தில் இருக்கும் ரோகினி- திருமணம் நடைபெறுமா?

stella / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் புதிதாக ஆரம்பித்தாலும் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் சிறகடிக்க ஆசை. இதில் மனோஜ் கல்யாண வீட்டிலிருந்து தப்பித்து ஓடியதால் அவருக்கு பதிலாக முத்து மீனாவைக் கட்டி வாழ்ந்து வருகின்றார். மீனாவைக் கண்டாலே விஜயா கோபப்பட்டுக் கொண்டிருக்கின்றார்.

அத்தோடு மனோஜற்கு ரோகினி என்ற பெண்ணை திருமணம் முடிப்பதற்காக பேசியுள்ளார். ரோகினி முதல் திருமணம் செய்து ஒரு குழந்தை இருக்கின்றது என எந்த விஷயமும் மனோஜிற்கும் விஜயாவுக்கும் தெரியாது. இந்த உண்மை தெரிந்தால் ரோகினியின் நிலமை என்ன ஆகும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகமாக உள்ளது.


இப்படியான நிலையில் ஒரு ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதில் ரோகினியின் மேனேஜர் எப்படியாவது ரோகினி பற்றிய உண்மையை மனோஜ் வீட்டில் சொல்லி இந்தக் கல்யாணத்தை நிறுத்தியே ஆகனும் என்று வருகின்றார். இதனால் மனோஜ் ரோகினி திருமணம் நடைபெறுமா இல்லையா என்ற எதிர்பார்பபு ரசிகர்களிடம் அதிகமாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement