• Jul 24 2025

ஜாலியாக சுற்றுலாவை மேற்கொண்டுள்ள மானசி... அதுவும் அந்த இடத்தில் இந்த நபர் கூடவா...?

Prema / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் மொழியில் ஒளிபரப்பாகும் சின்னத்திரை சேனல்களில் விஜய் டீவி மிகவும் பிரபலமாக இருப்பதற்கு முக்கிய காரணம் வித்தியாசமான கதையம்சம் கொண்ட சீரியல்கள், மற்றொன்று மக்களின் மனங்களை கவர்ந்த ரியாலிட்டி ஷோக்கள். 


இந்த சேனலில் 'பிக்பாஸ், குக்வித் கோமாளி' உள்ளிட்ட பல புதுப்புது ரியாலிட்டி ஷோக்கள் வந்தாலும் 'சூப்பர் சிங்கர்' ஷோவிற்கு இருக்கும் ரசிகர் வட்டம் மிக பெரியது.

எவ்விதமான திரையுலகப் பின்புலமும் இல்லாமல் சூப்பர் சிங்கரில் பங்கேற்றதன் மூலம் தங்கள் குரல் வளத்தால் ரசிகர்களை கவர்ந்த பல பாடகர்களை உருவாக்கி தரும் மேடை இது என்பதால் இந்த நிகழ்ச்சிக்கு மக்களின் ஆதரவு மிக அதிகமாகும்.


இந்த நிகழ்ச்சியானது 2006 இல் தொடங்கி இன்றுவரை வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கின்றது. இந்த நிகழ்ச்சியில் 8-ஆவது சீசனில் மக்களின் ஃபேவரெட் வரிசையில் இடம் பிடித்த ஒருவரே மானசி.

வைல்டு கார்டு மூலம் இறுதி மேடையிலும் இடம் பிடித்தார். இந்நிகழ்ச்சியின் நடுவர்களில் குறிப்பாக இவரின் குரல் சித்ரா அம்மாவுக்கு மிகவும் பிடித்தமான ஒன்று. 


அதே போல் மானசிக்கு இணையத்திலும் ஏகப்பட்ட ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது. இவரின் அழகிற்கு மயங்காதவர்கள் கிடையாது.

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி முடிந்த பின்பும் ரசிகர்கள் மானசியை விடுவதாக இல்லை. தொடர்ந்து அவர் இன்ஸ்டாவில் வெளியிடும் வீடியோக்கள், புகைப்படங்களுக்கு லைக்ஸ்களை வாரிக் குவித்து வருகின்றனர்.


அந்த வகையில் சமீபத்திலும் மும்பையில் இவரது சக போட்டியாளரான அய்யனார் உடன் இணைந்து எடுத்த புகைப்படங்களை பதிவிட்டு இருக்கின்றார்.


அப்புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் தமது கமெண்டுகளை பதிவிட்டு அதன் மூலம் ஜொள்ளு விட்டும் வருகின்றனர். அத்தோடு ஒரு சில ரசிகர்கள் "மும்பையில் நீங்க என்ன பண்ணுறீங்க" என கேள்வி கேட்டும் வருகின்றனர்.

Advertisement

Advertisement