• Jul 25 2025

பொன்னியின் செல்வன் பார்ட்டியில் திடீரென அடிதடியில் ஈடுபட்ட பிரபலங்கள்- கடும் வருத்தத்தில் மணிரத்னம்

stella / 2 years ago

Advertisement

Listen News!


இயக்குநர் மணிரத்னத்தின் இயக்கத்தில் மிகவும் பிரமாண்டமாக வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற திரைப்படம் தான் பொன்னியின் செல்வன்.இப்படத்தில் விக்ரம், ஜெயம்ரவி, கார்த்தி ,ஐஸ்வர்யா ராய், த்ரிஷா எனப் பெரிய நட்சத்திரப்பட்டாளமே நடித்திருந்தனர்.

இப்படம் இதுவரை 400 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது. அந்த வகையில் படத்தின் வெற்றியைக் கொண்டாடும் முகமாக அண்மையில் படக்குழுவினர் அனைவரும் ஒரு பெரிய பார்ட்டி ஒன்றை நடத்தியுள்ளனர்.


இதில் நட்சத்திரங்கள் உட்பட படக்குழுவினர்களும் கலந்துகொண்டனர். மணி ரத்னத்தின் அழைப்பை ஏற்று இந்த நிகழ்வில் ரஜினிகாந்தும் கலந்துகொண்டார்.

மிகச்சிறப்பாக நடந்துகொண்டிருந்த இந்த பார்ட்டியில் லைகா நிறுவனத்தை சேர்ந்த ஒருவர் மணி ரத்னத்தின் பெண் உதவி இயக்குநரிடம் தவறான முறையில் நடந்துகொண்டுள்ளார்.


இதனால், அந்த பார்ட்டி கடைசியில் அடிதடியில் முடிந்துள்ளதாம். இந்த சம்பவத்தினால் லைகா நிறுவனத்தின் உரிமையாளர் சுபாஷ்கரன் வருத்தமடைந்துள்ளாராம்.அதே போல் மணி ரத்னத்திற்கு பெரும் வருத்தம் என பிரபல பத்திரிகையாளர் கூறியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 


Advertisement

Advertisement