• Jul 25 2025

மணி யாரிடமும் சண்டைக்கு போகமாட்டான், என்கிட்ட மட்டும் தான் சண்டை போடுவான்- பிக்பாஸ் மணி பற்றிய உண்மைகளை உடைத்த ஃபெலினா.

sarmiya / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் தொலைக் காட்சியில் ஔிபரப்பாகும்  விறு விறுப்புக்கு பஞ்சமில்லாத நிகழ்ச்சி தான் பிக்பாஸ் , தமிழில் கடந்த 2017-ம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது. இதன் 7வது சீசன் தற் பொழுது ஒளிபரப்பாகி வருகின்றது. 



ஆரம்பத்தில் 18 போட்டியாளர்கள் பங்கேற்ற நிலையில் இரண்டு போட்டியாளர்கள் வீட்டை விட்டு வெளியேறி இருக்கின்றனர். இந் நிலையில் அங்கு இருக்கும் சக போட்டியாளர்களான  மணி மற்றும் ரவீனாவும் காதலில் இருப்பதாக செய்திகள் பரவின. அத்தோடு  முன்னதாக  மணி ஃபெலினா என்பவருடன் காதலில் இருந்து தற்போது பிறேக்அப் எனவும்  பரவலாக ஒரு தகவல்  வெளியாகி இருந்தது..



இந்நிலையில்  ஃபெலினா இது குறித்து பிரபல ஊடகம் ஒன்றிற்கு பேட்டி வழங்கி இருக்கின்றார். 

நானும் மணியும் எங்கயும் லவ் பண்றோம் உறவில் இருக்கின்றோம் என சொன்னதில்லை. தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் சும்மா கதைத்திருக்கின்றோமே தவிர நிஜமாக எங்களுக்குள் அப்படி ஒரு உறவில்லை. நானும் மணியும் மீட் பண்ணுவோம் கோல் கதைப்போம் ஆனால் தற்போது முன்ன மாதிரி இல்லை. ஏனெனில் அவரவர் கெரியரில் ஃப்ஸி ஆனால்  மக்கள்  எமக்குள்  பிறேக்அப் என பல விதமான  கருத்துக்களை பதிவு செய்கின்றனர். அது பொதுவாகவே மக்களின் இயல்பு .பிக்பாஸ் போக முதல் மணி எனக்கு கோல்பண்ணி கதைத்தான் , பிக்பாஸ் போகப்போறன் எனவும் சொன்னான் நான் வாழ்த்தி தான்வழி அனுப்பினேன்.


அண்மையில் எனக்கு நிச்சயதார்த்தம் நடந்தது. அந்த போட்டோவை நான் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருந்தேன் அதற்கு சிலர் மணியை கழட்டி விட்டீர்களா? அல்லது மணி உங்களை கழட்டி விட்டிட்டாரா?  உங்க பெயர் நல்லா இருந்தீச்சு என அப்பிடி நிறைய கருத்துக்களை பதிந்திருந்தனர்.

மணி யாரிடமும்  சண்டைக்கு போகமாட்டான்,  என்கிட்ட மட்டும் தான் சண்டை போடுவானே தவிர யார்கூடயும் சண்டை போடமாட்டான். ஆனால் மணிக்கு கோபம் வரும் ரவீனாவும் மணியும் ரெம்பவே நெருக்கமாக இருக்கிறாங்க ஆனால் எப்ப தாெடக்கம் என தெரியாது என கூறியிருந்தார். 

Advertisement

Advertisement