• Jul 23 2025

மலரைத் தன்னிடம் தரச் சொல்லி மகேந்திரனை தள்ளி விட்ட மாணிக்கம்- செல்லம்மா எடுத்த முடிவு- வெளியாகிய வீடியோ

stella / 2 years ago

Advertisement

Listen News!


தமிழின் முன்னணி தொலைக்காட்சிகளில் ஒன்றாக திகழ்ந்து வருவது விஜய் டிவி. இந்த சேனலானது 20 வருடங்களுக்கும் மேலாக தங்களின் வித்தியாசமான தொடர்கள் மூலமாகவும், விறுவிறுப்பான தொடர்கள் மூலமாகவும் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்து உள்ளது.

இந்தத் தொலைக்காட்சிகளில் ஹிட்டாக ஒடும் சீரியல்களில் ஒன்று தான் செல்லம்மா. இந்த மற்ற சீரியல்களைப் போலவே இந்த சீரியலும் விறுவிறுப்பாக நகர்ந்த வண்ணம் இருக்கின்றது. 

இந்நிலையில் இந்த சீரியலுக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.அதாவது செல்லம்டா தான் தன்னுடைய மகள் என்று மகேந்திரனுக்கு தெரிந்து விட்டதால் மகேந்திரனும் மனைவியும் செல்லம்மா மற்றும் மகள் மீது அதிக அக்கறை செலுத்தி வருகின்றனர்.

மேலும் மாணிக்கத்திடம் இருந்து செல்லம்மாவுக்கு டிவோர்ஸும் வாங்கிக் கொடுத்து விட்டனர். இப்படியான நிலையில் மகேந்திரனும் அவரது மனைவியும் மலரை கடைக்குக் கூட்டிக் கொண்டு போய் அழகான சான்டில்ஸ் வாங்கிக் கொடுக்கின்றனர். இதைப் பார்த்த மாணிக்கம் மலரை தன்னுடன் கூட்டிச் செல்ல பார்க்கின்றார்.

இருப்பினும் மகேந்திரன் கடை ஊழியர்களின் உதவியுடன் மாணிக்கத்தை அனுப்பி விடுகின்றனர். பின்னர் தொடர்ந்து வீட்டுக்கு வந்ததும் செல்லம்மா மகேந்திரனிடம் மலருக்கு இப்படி காஸ்லியான செருப்பு இனிமேல் வாங்கிக் கொடுக்காதீங்க என்று கூறுகின்றார். இது குறித்த ப்ரோமோ தான் வைரலாகி வருகின்றது.




Advertisement

Advertisement