• Jul 24 2025

நடிகர் ரகுவரன் போல பேசி போட்டியாளர்களை மிரள வைத்த மணிகண்டன்- கேபிவை சம்பியன்ஸ் நிகழ்ச்சியில் நடந்த சுவாரஸியம்

stella / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் பல ரியாலிட்ரி ஷோக்கள் ஒளிபரப்பாகி வருகின்றன. அவ்வாறு சூப்பர் ஹிட்டாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் சீரியல் தான் கலக்கப்போவது யாரு சாம்பியன்ஸ். இதில் இந்த வாரம் வரவிருக்கும் எபிசோடில் குட் நைட் படக்குழுவினர் கலந்துகொண்டுள்ளனர்.

வருகிற 12ஆம் தேதி மணிகண்டன் நடிப்பில் வெளிவரவிருக்கும் திரைப்படம் குட் நைட். இப்படத்தில் நடித்த நடிகர் நடிகைகள் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சிக்கு விருந்தினராக வந்துள்ளார்கள்.


அப்போது குட் நைட் படக்குழுவின் கதாநாயகன் தமிழ் சினிமா நடிகர்களை போல் பேசி அசத்தினார். முதலில் அஜித் போல் மூன்று வகைகளில் பேசினார். குறிப்பாக வாலி படத்தில் அஜித் எப்படி பேசினாரோ அதே போல் பேசி அனைவரையும் அசரவைத்துவிட்டார்.

தொடர்ந்து நடிகர் கிஷோர் போல் பேசினார். அதன்பின் ரகுவரன் போல் பேசியதும் அனைவரும் ஷாக்காகிவிட்டனர். சாதாரணமாக ரகுவரனின் வில்லன் குரலை பலரும் பேசி நாம் கேட்டிருப்போம்.


ஆனால், அவருடைய கடைசி காலகட்டத்தில் பேசிய குரலை அழகாக பேசினார் மணிகண்டன். குறிப்பாக யாரடி நீ மோஹினி படத்தில் ரகுவரன் எப்படி பேசியிருப்பாரோ அதே போல் பேசினார். அது தான் அனைவருக்கும் ஆச்சரியத்தை கொடுத்தது.மணிகண்டன் இப்படி பேசியது அங்கிருந்த போட்டியாளர்கள் பலரும் மிரண்டு போய்விட்டனர். இந்த வீடியோ தற்பொழுது வைரலாகி வருகின்றது.


Advertisement

Advertisement