• Jul 26 2025

''குட் நைட்'' படத்திற்கு பின் சம்பளத்தை தாறுமாறாக உயர்த்திய மணிகண்டன்!..இத்தனை கோடிகளா?

Jo / 2 years ago

Advertisement

Listen News!

ஹீரோ , எழுத்தாளர், மிமிக்ரி கலைஞர் எனப் பல பன்முகங்களை கொண்டவர் தான் மணிகண்டன். ஆரம்பத்தில் படங்களில் குணசித்ர கதாபாத்திரத்தில் நடித்து இவர் ஜெய் பீம் படத்தில் முக்கியமான ரோலில் நடித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.

இவர் நடிப்பில் கடந்த மே 12 -ம் தேதி குட் நைட் என்ற திரைப்படம் வெளிவந்தது. இதில் மீதா ரகுநாத் ரமேஷ் திலக், பகவதி பெருமாள், பாலாஜி சக்திவேல் என பல பிரபலங்கள் நடித்திருந்தனர். சிறிய பட்ஜெட்டில் உருவான இப்படம் 10 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

இந்நிலையில் குட் நைட் படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து மணிகண்டன் சம்பளத்தை உயர்த்தியுள்ளதாக சொல்லப்படுகிறது. 

தற்போது இவர் ரூபாய். 2 கோடி சம்பளம் கேட்பதாக சினிமா வட்டாரங்களில் சொல்லப்படுகிறது. 


Advertisement

Advertisement