• Jul 25 2025

லெஜண்ட் சரவணன் உடன் ஜோடி சேர்ந்த மணிமேகலை- அடடே ஸ்ருதிகாவும் இருக்கின்றாரே?- இது என்ன புது காம்போவாக இருக்கே?

stella / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் கடந்த சில ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் மிகவும் புகழ் பெற்றவர் தான் மணிமேகலை.இவர்  சன் மியூசில் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்த மணிமேகலை நடன கலைஞர் ஹுசைன் என்பவரை காதலித்து வந்தார். பெற்றோர் திருமணத்திற்கு சம்மதிக்காத காரணத்தால் கடந்த 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்கள்.

திருமணத்துக்கு பிறகு சன் மியூசிக்கில் இருந்து விலகி விஜய் டிவிக்கு வந்த மணிமேகலை குக் வித் கோமாளி உட்பட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு தனது நகைச்சுவை திறமையால் ஏராளமான ரசிகர்களை பெற்றார். தற்போது ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் திடீரென வெளியேறினார்.


எந்த காரணத்தினால் குக் வித் கோமாளி நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார் என்று தெரியவில்லை. அதனை குக் வித் கோமாளி நிகழ்ச்சியும் சரி, மணிமேகலையும் சரி இரண்டு தரப்பிலும் தெரிவிக்கவில்லை.


இந்த நிலையில் குக் வித் கோமாளி ஸ்ருதிகா மற்றும் மணிமேகலை வெளியிட்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. தி லெஜண்ட் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான லெஜண்ட் சரவணன் தற்போது தாடி வைத்து புது கெட்டப்பில் இருந்த புகைப்படங்கள் வெளியானது.


குக் வித் கோமாளி ஸ்ருதிகா மற்றும் மணிமேகலை லெஜண்ட் சரவணன் உடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு, அதில் சரவணா ஸ்டோர்ஸ் விளம்பரத்தில் நடித்து உள்ளோம் என்று பதிவிட்டுள்ளார். ரசிகர்கள் இதனை வைரலாக்கி வருகின்றனர்.


Advertisement

Advertisement