• Jul 26 2025

நடுரோட்டில் குத்தாட்டம் போட்ட மணிமேகலை... அடிக்கக் கையோங்கி.. தரதரவென இழுத்துச் சென்ற கணவர்... வைரல் வீடியோ..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

சன் மியூசிக் சேனலில் ஆங்கராக அறிமுகமாகி பின்னர், குக் வித் கோமாளி மணியாகி, இதனைத் தொடர்ந்து இன்று குக் வித் கோமாளி நிகழ்ச்சித் தொகுப்பாளராக பல லட்சம் ரசிகர்களை சம்பாதித்து இருக்கும் தொகுப்பாளினி தான் மணிமேகலை. 


இவர் லாரன்ஸ் மாஸ்டரிடம் நடன உதவியாளராக இருந்த ஹூசைன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இருவரும் வெவ்வேறு மதம் என்பதால் இவர்களின் காதலுக்கு எதிர்ப்பு கிளம்பியது. பின்பு இருவரும் பதிவு திருமணம் செய்துக்கொண்டனர். பெற்றோர்கள் சம்மதம் இல்லாமல் திருமணம் செய்துக் கொண்ட இவர்கள் தொடர்ந்து கெரியரில் முன்னேறி இப்போது ஒரு நல்ல இடத்தை அடைந்துள்ளனர். 


இந்நிலையில் தற்போது மணிமேகலை நடுரோட்டில் நின்று டான்ஸ் ஒன்றினை ஆடி இருக்கின்றார். அந்த சமயத்தில் அங்கு வந்த அவரின் கணவர் ஹுசைன் அவரை அடிக்கக் கை ஓங்கி விட்டு தரதரவென இழுத்துச் செல்கின்றார். இது குறித்த ரீல் வீடியோவை மணிமேகலை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இதோ அந்த க்யூட் வீடியோ..!  


Advertisement

Advertisement