• Jul 24 2025

திடீரென தனது குடும்பத்தினரை அறிமுகம் செய்த மஞ்சுவாரியர்..தீயாய் பரவும் புகைப்படங்கள்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

மலையாளத்தில் முன்னணி நடிகையாக  தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் தான்  நடிகை மஞ்சு வாரியர்.தமிழில் தனுஷ் நடித்த அசுரன் படத்தில் பச்சையம்மாள் எனும் கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானார். தற்போது பொங்கலுக்கு ரிலீசான துணிவு படத்தில் கண்மணி எனும் கதாபாத்திரத்தில் மஞ்சு வாரியர் நடித்திருந்தார்.

துணிவு' திரைப்படம் ஜனவரி 11ஆம் தேதி அன்று பொங்கலை முன்னிட்டு வெளியானது. அத்தோடு இந்தத் திரைப்படம்  உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.


மேலும் இந்த படத்தில் நடிகர்கள் ஜான் கொக்கன், வீரா, சமுத்திரக்கனி, மகாநதி சங்கர், பிக்பாஸ் அமீர், பாவனி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.இந்த படத்திற்கு நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார்,  கலை இயக்குநராக மிலன் பணிபுரிந்துள்ளார்.இந்த படத்தின் இசையமைப்பாளராக ஜிப்ரான் பணிபுரிந்துள்ளார். எடிட்டராக விஜய் வேலுக்குட்டியும் சண்டை காட்சிகளை சுப்ரீம் சுந்தரும் வடிவமைப்பு செய்துள்ளனர்.


துணிவு படத்தின் ஓடிடி உரிமத்தை பிரபல நெட்பிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.அத்தோடு  சேட்டிலைட் உரிமத்தை பிரபல கலைஞர் தொலைக்காட்சி சேனல் கைப்பற்றியுள்ளது. மேலும் ஆடியோ உரிமத்தை ஜி மியூசிக் நிறுவனம் கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.


துணிவு படம் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.சமீபத்தில் நடிகை மஞ்சு வாரியர் தமது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விலையுயர்ந்த BMW பைக் வாங்கும் வீடியோவை வெளியிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.


இவ்வாறுஇருக்கைகயில் தமது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மஞ்சு வாரியர் தனது குடும்ப உறுப்பினர்களை அறிமுகம் செய்து புகைப்படங்களையும்  பகிர்ந்துள்ளார். 



மஞ்சு வாரியர் தாயார் எழுதிய நிலவேட்டம் என்ற நூலினை வெளியீட்டு விழாவில் இந்த புகைப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளன.மலையாள இயக்குனர் சத்யன் அந்திக்காடு இவ்விழாவில் கலந்து கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement