• Jul 24 2025

உறவுகள் இறந்தும் அழாத மனோபாலா...சினிமாக்காரர்களின் இறப்பு குறித்து கடைசியாக கொடுத்த பேட்டி..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் பல படங்களிலும் பிசியாக நடித்து வந்த நடிகர் மனோபாலா சமீபகாலமாகவே உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்தார். அதாவது கடந்த நான்கு மாதமாக வீட்டில் இருந்தே கல்லீரல் பிரச்சனைக்காக சிகிச்சை பெற்று வந்தார். 

 கடந்த ஒரு வாரமாக கல்லீரல் பிரச்சனை தீவிரமானதை அடுத்து அவதிப்பட்டு வந்த மனோபாலா இன்று சென்னையில் உள்ள அவரது வீட்டில் உயிரிழந்தார். இவரது மறைவு செய்தியை கேட்டு திரை பிரபலங்கள் மற்றும் அவரது ரசிகர்கள் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது இவரின் பேட்டி ஒன்று இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.அதாவது அதில் அவர் தெரிவித்ததாவது...

அதாவது நான் எனது பல உறவுகள் இறந்தும் கண்கலங்கி அழுததில்லை.ஆனால் நான் சினிமாக்காரர்கள் யார் இறந்தாலும் முன்னுக்கு போய் நிற்பேன்.அதை எப்பயும் விட்டுக்கொடுக்க மாட்டேன்அவங்க கல்யாண வீடுகளை கூட நான் விட்டுருவேன்.

ஆனால் அவங்க இறப்பை நான் ஒரு போதும் விட்டு கொடுக்க மாட்டேன்.இதை எனக்கு சொல்லிக் கொடுத்தது நடிகர் விவேக் தான் .அவருடைய இறப்பிற்கும் நான் சென்று இருந்தேன் மயில் சாமி இறப்பிற்கும் சென்றிருந்தேன்.யார் இறந்தாலும் அழாத நான் அவர்களுடைய இறப்பிற்கிற்கு உடைந்து கண்கலங்கி அழுதேன்.என கண்கலங்கி கூறியிருந்தார்.

Advertisement

Advertisement