• Jul 24 2025

மனோபாலாவின் ஒரு நாள் மருத்துவ செலவு இத்தனை லட்சமா...இறப்பதற்கு முன்பு இவ்வளவு சொத்துக்களை சேர்த்துள்ளாரா..?

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

மறைந்த இயக்குநரும், நடிகருமான மனோபாலாவின் சொத்து மதிப்பு பற்றி வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. 

பாரதிராஜா இயக்கத்தில் 1979ஆம் ஆண்டு புதிய வார்ப்புகள் என்ற திரைப்படத்தில் துணை இயக்குநராக தனது சினிமா பயணத்தை ஆரம்பித்தவர் தான் மனோபாலா.

அதற்குப்பின்னர் பல படங்களை தயாரிக்க ஆரம்பித்தார். அத்தோடு  வெள்ளித்திரை சின்னத்திரை என இரண்டிலும் தனது ஆதிக்கத்தை கொடி கட்டிப் பறக்க விட்டவர் இவர்.

மேலும்  இவர் நூற்றுக்கும் அதிகமான படங்களில் நடித்து 40 ஆண்டுகளுக்கும் மேல் சினிமாவில் வாழந்திருக்கிறார். அத்தோடு மனோபாலா 14 திரைப்படங்களையும் 19 சின்னத்திரை தொடர்களையும் இயக்கியிருக்கிறார்.

இவ்வாறுஇருக்கையில்  கடந்த ஜனவரி மாதம் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றுவந்தார். அத்தோடு இவ்வாறு சிகிச்சைப் பெற்று வந்த மனோபாலா கடந்த வாரம் 3ஆம் திகதி கல்லீரல் பிரச்சினைக்காரணமாக தனது 69 வயதில் உயிரிழந்தார்.

  மறைந்த நடிகர் மனோபாலாவின் சொத்து மதிப்பு 30 கோடி தானாம்.என்னதான் சினிமாவில் நடித்து வந்தாலும் படங்களை இயக்கி வந்தாலும் எல்லாம் எல்லாமே மருத்துவ செலவுக்கு போகுமாம்.

மனோபாலா ஒரு தடவை மருத்துவமனைக்கு சென்று வந்தால் குறைந்தது 10 இலட்சம் வரை செலவாகுமாம்.

அதுமட்டுமல்லாமல் மனோபாலா நாளொன்று 10 சிகரெட்டுகள் புகைப்பாராம் இதனால் பல பாதிப்புகள் ஏற்பட அதையும் விட்டு விட்டாராம்.   

Advertisement

Advertisement