• Sep 09 2025

லியோ படத்தின் சீக்ரெட்டை உளறிய Mansoor Ali Khan- இப்படியொரு சீனும் இருக்கிறதா?

stella / 2 years ago

Advertisement

Listen News!

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் லியோ. இந்தப் படம் அக்டோபர் மாதம் 19ம்  தேதி வெளியாகவுள்ளது. இப்படத்தின் ஷூட்டிங் முடிந்துவிட்ட நிலையில் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.இப்படத்தின் ரிலீசுக்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

இப்படத்தில் கதாநாயகியாக த்ரிஷா நடித்துள்ளார். இவருடன் முக்கிய கதாப்பாத்திரத்தில்  மன்சூர் அலி கான், கௌதம் மேனன், மிஷ்கின் உள்ளிட்ட பலரும் நடித்து இருக்கின்றனர்.இந்நிலையில் மன்சூர் அலி கான் சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசும்போது லியோ படத்தின் முக்கிய காட்சி ஒன்றை பற்றி உளறிவிட்டார்.


லோகேஷ் கனகராஜ் இயக்கும் படத்தில் ஒரு காட்சியிலாவது நடித்துவிட்டு படத்தில் இறந்துவிட வேண்டும் என அனுராக் காஷ்யப் அளித்த பேட்டியை முதல் நாள் படித்தேன். அதன்பின் மறுநாள் பார்த்தால் அனுராக் கேரவனில் உட்கார்ந்து இருந்தார்.


'அவர் என்ன நடித்தார் என தெரியவில்லை, வந்தாரு - சுட்டாரு போய்ட்டாரு' என மன்சூர் அலி கான் கூறினார். அதன் பிறகு தான் லியோ சீக்ரெட்டை உளறுகிறோம் என உணர்ந்து 'அய்யய்யோ.. லியோ பத்தி இனி என்னிடம் கேட்காதீங்க' என்று கூறியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement