• Jul 25 2025

“மாப்ள நான் சொல்லுறத கேளு மாப்ள” மயில்சாமியின் இறுதிக் குரல் பதிவு

Jo / 2 years ago

Advertisement

Listen News!

நகைச்சுவை நடிகர் மயில்சாமி நேற்று இரவு சிவராத்திரி பூஜையில் கலந்துகொண்டு விட்டு வீடு திரும்பிய போது இன்று ( பிப்ரவரி 19 ) அதிகாலை காலமானார்.  

இதனிடையே நடிகர் மயில்சாமி கடைசியாக பேசிய வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. அதன்படி அவர் கிளாஸ் மேட்ஸ் என்கிற திரைப்படத்திற்காக நேற்று (பிப்ரவரி 18) டப்பிங் பேசி உள்ளார். 

அப்போது எடுக்கப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது. 

அந்த வீடியோவில், ‘மாப்ள நான் சொல்றத கேளு மாப்ள. விஷயம் இது இல்லை. நான் அக்காட்ட சொல்லிருக்கேன், எல்லாமே அவ பாத்துப்பா. இங்க பாரு, நீ யாருக்கும் மனசுல துரோகம் நினைக்காம ஃபிரீயா இரு. நீ கரெக்டா இரு நிறையா சம்பாதிப்ப” என பேசியுள்ளார் மயில்சாமி. 

இந்த வீடியோ காண்போரை கண்கலங்க செய்து உள்ளது. அந்த வீடியோவில் மிகவும் ஆரோக்கியத்துடன் இருக்கும் அவருக்கு இப்படி ஒரு மரணமா ஏற்பட்டு இருப்பதை யாராலும் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.


Advertisement

Advertisement