• Jul 24 2025

மீண்டும் சம்பவம் செய்ய போகும் மாரி செல்வராஜ் - வடிவேலு கூட்டணி ?அதுவும் இந்த படத்தின் ரீமேக்கா..?

Jo / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முன்னிலையில் இருக்கும் இயக்குனர்களில் ஒருவர் தான் மாரி செல்வராஜ். பரியேறும் பெருமாள் என்ற தன் முதல் படத்தின் மூலமே மிகப்பெரிய தாக்கத்தை தமிழ் சினிமாவில் உண்டாக்கினார். அதன் பிறகு தனுஷை வைத்து கர்ணன் என்ற வெற்றிப்படத்தை கொடுத்து தமிழ் சினிமாவின் முன்னிலை இயக்குநராக முன்னேறினார் மாரி செல்வராஜ்.

சமீபத்தில் இவர் இயக்கத்தில் வெளியான மாமன்னன் வெளியாகி ரசிகர்களின் பேராதரவை பெற்று வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. ஐம்பது கோடிக்கு மேல் வசூலித்து இருக்கும் மாமன்னன் திரைப்படம் வசூல் ரீதியாக மட்டுமல்லாமல் விமர்சன ரீதியாகவும் அனைவரது பாராட்டையும் பெற்றுள்ளது.

குறிப்பாக இப்படத்தில் நடிகர் வடிவேலுவின் கதாபாத்திரமும் நடிப்பும் வெகுவாக ஈர்த்துள்ளது. இதுவரை வடிவேலுவை நகைச்சுவை நடிகராகவே ரசிகர்கள் பார்த்து வந்த நிலையில் மாமன்னன் படத்தில் வித்யாசமான வைகைபுயலை ரசிகர்களுக்கு காண்பித்தார் மாரி செல்வராஜ். படத்தை பார்த்த அனைவருமே வடிவேலுவின் நடிப்பை பாராட்டி வரும் நிலையில் மாமன்னன் மூலம் மீண்டும் வெற்றிப்பாதைக்கு திரும்பியுள்ளார் வடிவேலு.

இந்நிலையில் தற்போது அடுத்தடுத்து பல படங்களில் நடிக்க கமிட்டாகி வரும் வடிவேலு மீண்டும் மாரி செல்வராஜுடன் இணைய பேச்சுவார்த்தை நடத்தி வருகிறாராம். அதாவது LIFE IS BEAUTIFUL என்ற இத்தாலியன் படத்தை வடிவேலுவை நாயகனாக வைத்து தமிழில் ரீமேக் செய்ய திட்டமிட்டு வருகிறாராம் மாரி செல்வராஜ்.

இதனை வடிவேலுவே ஒரு பேட்டியில் கூறியுள்ளார். அப்படம் வடிவேலுவுக்கும் மிகவும் பிடித்த படம் என்றும், அப்படத்தை மாரி செல்வராஜ் வடிவேலுவை வைத்து தமிழில் ரீமேக் செய்ய விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார் வடிவேலு. இந்த தகவல் ரசிகர்களை மேலும் எதிர்பார்ப்பில் ஆழ்த்தியுள்ளது. எனவே பொறுத்திருந்து பார்ப்போம்.

Advertisement

Advertisement