• Jul 24 2025

'எதிர்நீச்சல்' ப்ரோமோவில் மீண்டும் ஒலித்த மாரிமுத்துவின் கம்பீரமான குரல்... அட கடவுளே இதுதான் கடைசியா..? இனி இந்தக் குரலை எங்கு கேட்போம்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

சன் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபல ஹிட் சீரியல் தான் 'எதிர்நீச்சல்'. இந்த சீரியலானது நாளுக்கு நாள் விறுவிறுப்பான கதைக்களத்தைக் கொண்டு அதிரடித் திருப்பத்துடன் நகர்ந்த வண்ணம் இருக்கின்றது. இந்நிலையில் இன்றைய நாளுக்கான ப்ரோமோ வீடியோ வெளியாகி இருக்கின்றது.


அதில் ரேணுகா இருக்கும் இடத்திற்கு வந்த கரிகாலனிடம் "வேவு பார்க்க சொல்லி உன்னை அனுப்பி விட்டாங்களா..?, இந்த மாதிரி வேலை எல்லாம் வச்சுக்கிட்டாய் என்று வச்சுக்கொள் முகரையில் மூக்கு, வாய், கண், காது எதுவுமே இருக்காது பார்த்துக்கொள், ஓடிப்போயிடு" என ரேணுகா மிரட்டுகின்றார். இதனையடுத்து கரிகாலனும் அந்த இடத்திலிருந்து நகர்ந்து செல்கின்றார்.


பின்னர் கரிகாலனைப் பார்த்து குணசேகரன் "கரிகாலா எனக்கும் சந்தேகமாய் தான்டா இருக்கு" எனக் கூறிவிட்டு குணசேகரன் வழக்கம்போல தனது தாய் விசாலாட்சியை ஏதோ திட்டிக் கொண்டிருக்கிறார். இவ்வாறாக இந்தப் ப்ரோமோ வெளியாகி இருக்கின்றது.


மேலும் அவரது சொந்த குரலில் கடைசியாக அந்த ப்ரோமோ வெளியாகி இருக்கிறமை ரசிகர்களை கண் கலங்க வைத்துள்ளது. 


Advertisement

Advertisement