• Jul 25 2025

இலங்கைப் பெண்ணுடன் திருமணமா?- சிம்பு தரப்பிலிருந்து கிடைத்த விளக்கம்- மீண்டும் பஃல்பா?

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சிம்பு. இவர்  ஒப்பேலி என் கிருஷ்ணா இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘பத்து தல’ திரைப்படத்தில் நடித்திருக்கிறார். ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் ஞானவேல் ராஜா தயாரிப்பில் உருவாகி இருக்கும் இப்படத்தில் கௌதம் மேனன், பிரியா பவானி சங்கர், கௌதம் கார்த்திக், கிங்ஸ்லி ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர்.

 சிம்புவுக்கு தற்போது 40 வயது ஆகிறது. இன்னும் திருமண பந்தத்தில் இணைந்து கொள்ளவில்லை.அவர் இதற்கு முன்பு நயன்தாரா, ஹன்சிகா உள்ளிட்ட நடிகைகள் உடன் காதலில் இருந்திருக்கிறார் என்றாலும் அது பிரேக்அப்பில் தான் முடிந்தது. தற்போது சிம்புவின் குடும்பம் கடந்த சில வருடங்களாகவே தீவிரமாகவே அவருக்காக பெண் தேடி வருகிறது.


கடவுள் தான் சிம்புவுக்கு ஏற்ற பெண்ணை காட்டவேண்டும் என அவரது அப்பா டிஆர் பேட்டியில் கூறி இருக்கிறார். மேலும் தொடர்ந்து சிம்பு திருமணம் பற்றியே செய்தியாளர்கள் கேட்பதால் சமீபத்திய ஒரு பேட்டியில் அது பற்றி பேசமுடியாது என கோபமாக கூறிவிட்டார்.சில தினங்களுக்கு முன்பு சிம்பு இலங்கையை சேர்ந்த ஒரு பெண்ணை திருமணம் செய்கிறார் என செய்தி வெளியானது.

தற்போது சிம்புவின் மேனேஜர் இது பற்றி விளக்கம் கொடுத்து இருக்கிறார். இந்த செய்தி முற்றிலும் பொய்யானது என்றும், சிம்புவுக்கு திருமணம் உறுதியானால் முதலில் மீடியாவிடம் தான் அழைத்து சொல்வார் என விளக்கம் கொடுத்திருக்கிறார்.  


பத்து தல திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் மார்ச் மாதம் 18ஆம் தேதி சென்னையில் உள்ள நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளதும் குறிப்பிடத்தக்கது.



Advertisement

Advertisement