• Jul 25 2025

பிரபல நடிகருடன் திருமணமா?: நடிகை லாவண்யா விளக்கம்

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

மெகாஸ்டார் சிரஞ்சீவியின் தம்பி மகனான நடிகர் வருண் தேஜும், நடிகை லாவண்யா திரிபாதியும் காதலிப்பதாக முன்பு பேச்சு கிளம்பி அடங்கியது. இந்நிலையில் பார்ட்டி ஒன்றில் வருணும், லாவண்யாவும் பங்கு பற்றி உள்ளார்கள்.

இதையடுத்து வருண் தேஜும், லாவண்யாவும் காதலிப்பதாக மீண்டும் பேசப்படுகின்றது. லாவண்யாவும், வருணும் லிவ் இன் முறைப்படி வாழ்ந்து வருகிறார்கள். அவர்களுக்கு விரைவில் திருமணம் என்றெல்லாம் சமூக வலைதளங்களில் கிசுகிசுக்கப்பட்டது.



இது குறித்து பேட்டி ஒன்றில் லாவண்யாவிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர் தெரிவித்ததாவது...

அது எல்லாம் வெறும் வதந்தி. நான் சிங்கிளாகத் தான் இருக்கிறேன். நானும், வருண் தேஜும் சேர்ந்து இரண்டு படங்களில் நடித்திருக்கிறோம். அதனால் தான் இப்படி பேசுகிறார்கள். நானும், வருணும் லிவ் இன் முறைப்படி வாழ்வதாக சொல்வது தான் நம்பவே முடியாத விஷயம் என்றார்.

வருணின் தங்கை நிஹாரிகாவுக்கு லாவண்யா நெருக்கமானவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் கெரியரை பொறுத்தவரை லாவண்யா நடிப்பில் கடைசியாக வெளியான படம் ஹேப்பி பர்த்டே.

அத்தோடு வருண் தேஜ் நடிப்பில் கடைசியாக வெளியான படம் எஃப்3. வருணுடன் வெங்கடேஷ், தமன்னா, மெஹ்ரீன் பிர்சாதா உள்ளிட்டோர் நடித்த அந்த படம் சூப்பர் டூப்பர் ஹிட்டானது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement