• Jul 25 2025

உன்னை புரிஞ்சு கொள்றவங்களை திருமணம் செய்...ரேஷ்மாவின் முன்னாள் கணவரின் வைரல் வீடியோ....!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் புகழ் ரேஷ்மா தற்போது பாக்கியலட்சு சீரியலில் வில்லி ரோலில் நடித்து வருகின்றார்.இவருக்கு என்று அந்த சீரியலை பார்ப்பவர்கள் தனி கூட்டமே உள்ளது.தொகுப்பாளினியாக தன் திரைப்பயணத்தை ஆரம்பித்த ரேஷ்மா இன்று திரைப்படங்கள், வெப் தொடர்கள், டிவி சீரியல்கள் என பிஸியான நடிகையாக ரசிகர்கள் மத்தியில் வலம் வருகின்றார்.


2015 ஆம் ஆண்டு வெளியான மசாலா படம் என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார் ரேஷ்மா.எனினும் அதைத்தொடர்ந்து கோ 2, வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் போன்ற படங்களில் நடித்து பட்டையயை கிளப்பியுள்ளார் ரேஷ்மா. 



இந்நிலையில் பிரத்தியோக ஊடகம் ஒன்றிற்கு பேட்டி கொடுத்த நிலையில்..அவரின் கணவர் ரேஷ்மா பற்றி சில விசயங்களை பகிர்ந்துள்ளார்.

அதில் தெரிவித்ததாவது.....“நான் இதை சொல்லியே ஆகணும் வாழ்க்கையை நீங்க எப்போ வாழ ஆரம்பிக்குறீங்களோ அப்போ நேரம் கடந்து போயிட்டே இருக்கு.அதுவும் சின்ன வயசுல முக்கியமான முடிவுகள் எடுக்கிற சூழ்நிலையில் கண்டிப்பா தவறுகள் நடக்கும்.இன்னைக்கு ஒரு Matured Adult-ஆ நான் சின்ன வயசுல பண்ண மிஸ்டேக்ஸை ஒத்துக்கொள்ளுகின்றேன்.அதை தான் இப்போ பேசி சரி செய்ய பார்க்கிறேன்.


நான் ரேஷ்மாவிற்கு முதல்ல நன்றி சொல்லிக்கிறேன்.எங்க மகனுக்கு சிறந்த தாயா இருக்கிறதிற்கும்...ரொம்ப சின்ன வயசில மிக பெரிய பொறுப்புக்கள் சுமக்கிறதிற்கும் முக்கியமா அவங்க கரியர பார்த்துக்கிட்டே பண்றதிற்கும்.அத்தோடு எனக்கு தெரியும் அவங்க கனவு எப்பவும் பிக் ஸ்கிறீனில் வாறது தான்.இன்னைக்கு அவங்கள அப்பிடி பாக்குநதுக்கு ரொம்ப வியப்பா இருக்கு.அத்தோடு அவங்க வெற்றி எல்லாத்துக்கும் வாழ்த்துக்கள்.

அவங்களுக்கு தகுதியான ஆளை உண்மையா புரிஞ்சிக்கிறவங்களை அவங்க கண்டிப்பா தேர்ந்தெடுக்கனும் என்று நான் விரும்புகிறேன்.அவங்களை திருமணம் செய்து கொள்ள வேண்டும்..என் பையனை பத்தியும் சொல்லனும்..ரொம் பெருமையாக இருக்கு ..” என நிறைய விசயங்களை பகிர்ந்துள்ளார்.

Advertisement

Advertisement