• Jul 25 2025

விக்னேஷ் சிவனுக்குப் பதிலாக.. AK 62 இல் அஜித்தை இயக்கப் போவது இவரா.. கை கோர்க்கவுள்ள மாஸ் கூட்டணி..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராகத் திகழ்ந்து வருபவர் நடிகர் அஜித். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான 'துணிவு' படமானது நல்ல வசூலினை ஈட்டி இருக்கின்றது. இதனால் அஜித்தின் அடுத்த படமான 'AK62' இன் மீது தான் ரசிகர்களின் கவனம் தற்போது அதிகம் திரும்பி இருக்கிறது. 


அதாவது விக்னேஷ் சிவன் அந்த படத்தை இயக்குவதாக ஏற்கெனவே அறிவிக்கப்பட்டு இருக்கும் நிலையில் தற்போது அவர் வெளியேறுவதாக தொடர்ந்து பல தகவல் வெளியாகி இருக்கின்றன. இருப்பினும் லைகா நிறுவனமோ அல்லது அஜித் தரப்போ இது பற்றி எந்த ஒரு அதிகாரப்பூர்வமான விளக்கமும் கொடுக்காமல் தான் தற்போது வரை இருந்து வருகின்றனர்.


இந்நிலையில் தான் தற்போது 'AK 62' படத்தை மகிழ் திருமேனி இயக்க இருப்பதாக புது தகவல் ஒன்று சமூக வலைத்தளப் பக்கங்களில் தீயாய் பரவி வருகின்றது. அதாவது தமிழ் சினிமாவில் 'தடம், கலகத் தலைவன்' போன்ற படங்களை இயக்கிய ஒரு பிரபல இயக்குநர் தான் மகிழ் திருமேனி என்பது குறிப்பிடத்தக்கது.

இருப்பினும் இந்தத் தகவலானது எந்தளவிற்கு உண்மை என்பது குறித்து தெரியவில்லை. எதுவாக இருப்பினும் இது பற்றி அதிகாரபூர்வ தகவல் வந்தால் தான் உறுதியாகும் எனக் கூறப்படுகின்றது.

Advertisement

Advertisement