• Jul 24 2025

கேரளாவில் பாரிய தீ விபத்து.. 6ஆண்டுகளுக்கு முன்பே கணித்த மோகன்லால்.. பேசுபொருளாக மாறிய கடிதம்..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

மலையாள திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவராகத் திகழ்ந்து வருபவர் மோகன்லால். இவர் சினிமாவில் மட்டுமன்றி மக்கள் நலனிலும், சமூக சேவைகளிலும் மிகுந்த ஈடுபாடு கொண்ட ஒருவராகவும் விளங்கி வருகின்றார்.


கையில் கேரள மாநிலம் கொச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட பிரம்மபுரத்தில், 110 ஏக்கரில் செயல்பட்டு வரும் குப்பை கிடங்கில் கடந்த 2-ஆம் தேதி பாரிய தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தால் கொச்சியில் உள்ள பல்வேறு பகுதிகள் புகை மண்டலமாக மாறி காட்சி அளித்தது. இதனையடுத்து அங்குள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு மூன்று நாட்களுக்கு அரசு விடுமுறை அளித்தது. இந்த விவகாரம் ஆனது கேரளாவில் பெரும் பேசுபொருளாக மாறியது. 


இந்நிலையில் மோகன்லால் சுமார் 6 ஆண்டுகளுக்கு முன்பு எழுதிய கடிதம் ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. அதாவது கேரள முதல்-மந்திரி பினராயி விஜயனுக்கு 6 ஆண்டுகளுக்கு முன்பு மோகன்லால் கடிதம் ஒன்றை எழுதி இருக்கின்றார்.

அந்த கடிதத்தில், கேரள முதல்-மந்திரி படிக்க வேண்டும் என்ற தலைப்பில் கேரளா எதிர்கொள்ளும் குப்பை பிரச்சினை குறித்து மோகன்லால் விவரித்து இருக்கின்றார். அதாவது "கேரளாவை அச்சுறுத்தும் மிகப்பெரிய பயங்கரவாதி யார் என்றால், அது குப்பையாக தான் இருக்கும்" என்று அந்த கடிதத்தில் மோகன்லால் குறிப்பிட்டுள்ளார். 


பிரம்மபுரம் குப்பை கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தைத் தொடர்ந்து, மோகன்லாலின் இந்த கடிதம் ஆனது தற்போது சமூக வலைதளங்களில் மீண்டும் பரவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement