• Jul 24 2025

ப்ரமோஷனுக்காக பிரஸ் மீட்டில் கலந்து கொண்ட மாவீரன் படக்குழு- வாவ்... வேற லெவலில் வெளியாகிய லேட்டஸ்ட் கிளிக்ஸ்

stella / 2 years ago

Advertisement

Listen News!

யோகி பாபுவின் மண்டேலா திரைப்படத்தின் மூலம் பிரபலமான இயக்குநர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் மற்றுமு் அதிதி ஷங்கர் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள திரைப்படம் தான் மாவீரன்.இதுவரை சிவகார்த்திகேயனின் எந்த திரைப்படத்திற்கும் இல்லாத அளவிற்கு ஒரு மாபெரும் வரவேற்பு மாவீரன் திரைப்படத்திற்கு கிடைத்திருக்கிறது.


பிரபல தயாரிப்பு நிறுவனமான சாந்தி டாக்கீஸ் இந்த படத்தை தயாரிக்கின்றது.இப்படத்தில் மூத்த நடிகையான சரிதா சிவகார்த்திகேயனின் தாயாக நடித்துள்ளார்.அதே சமயத்தில் வழக்கம் போல சிவாவுடன்  நகைச்சுவை கலாட்டா செய்ய யோகி பாபுவும் களமிறங்கவுள்ளார்.


பரத் சங்கர் இசையில் அதிதி சங்கர் மற்றும் சிவகார்த்திகேயன் குரலில் வெளியான "வண்ணாரப்பேட்டையில" பாடல் பெரிய அளவில் வரவேற்பை பெற்று வருகிறது. மேலும் இந்த படத்தில் இருந்து அடுத்தடுத்து வெளியான அனைத்து பாடல்களும் ரசிக்கும் வண்ணம் இருக்கிறது.


ஜூலை 14ம் தேதி மாவீரன் திரைப்படம் உலகெங்கிலும் தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் வெளியாக உள்ளது. இதற்கான ப்ரமோஷன் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர் படக்குழுவினர். தற்பொழுது சென்னையில் நடைபெற்ற பிரஸ் மீட் புகைப்படங்கள் தற்பொழுது வெளியாகியுள்ளது. பான் இந்தியா ஸ்டாராக மாறிவரும் சிவகார்த்திகேயனுக்கு அனைவரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.




Advertisement

Advertisement